தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'மாஜி' தேவதாசிகள், பாலின சிறுபான்மையினர் ஊக்கத்தொகை 45 ஆயிரம் ரூபாயாக உயர்வு

 'மாஜி' தேவதாசிகள், பாலின சிறுபான்மையினர் ஊக்கத்தொகை 45 ஆயிரம் ரூபாயாக உயர்வு

 'மாஜி' தேவதாசிகள், பாலின சிறுபான்மையினர் ஊக்கத்தொகை 45 ஆயிரம் ரூபாயாக உயர்வு


ADDED : மார் 07, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 06:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மகளிர், குழந்தைகள் நலன் l கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், 1.24 கோடி பயனாளிகளுக்கு இதுவரை, 62,345 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டு, 28,608 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

l பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக, உள்துறையுடன் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும், 'அக்கா படை' திட்டம் செயல்படுத்தப்படும்

l நடப்பாண்டு, 1 லட்சத்து 39,844 அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு கூடுதலாக சீருடை வழங்கப்படும்

l கர்நாடகாவில் முன்னாள் தேவதாசிகள், பாலின சிறுபான்மையினர் நலனுக்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது. முன்னாள் தேவதாசிகளின் குழந்தைகளுக்கு உயர்கல்வி, பெண் குழந்தைகளுக்கு சுயதொழில், வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நிதியுதவி வழங்க பிரத்யேக திட்டம் வகுத்து செயல்படுத்த, 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது

l தனுஸ்ரீ மற்றும் சேத்தனா திட்ட பயனாளிகள் மற்றும் முன்னாள் தேவதாசிகள், பாலின சிறுபான்மையினருக்கான ஊக்கத்தொகை, 30 ஆயிரம் ரூபாயில் இருந்து 45 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்

l போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, பெங்களூரு நிமான்ஸ் மற்றும் தார்வாடில் உள்ள திமான்சில், 'போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு மையங்கள்' நிறுவப்படும்

l கல்யாண கர்நாடகா மண்டல மேம்பாட்டு கார்ப்பரேஷன் சார்பில் இப்பகுதியில் உள்ள 1,668 அரசு நிலங்களில், அங்கன்வாடி கட்டடம் கட்ட, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

l நடப்பாண்டு மாவட்டத்தில் கூடுதலாக, 20 புதிய குழந்தைகள் காப்பகங்களை நிறுவ ஒரு கோடி ரூபாய் மானியம்.

l பெண்களின் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக, எங்கள் அரசின் முந்தைய ஆட்சியின் போது, 'மாத்ருபூர்ணா திட்டம்' செயல்படுத்தப்பட்டது. பின்னர் சூடான உணவுக்கு பதிலாக, ரேஷன் பொருள் வழங்கப்பட்டு வந்தது. எனவே, மீண்டும் சூடான சமைத்த உணவு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும்

l நடப்பாண்டு குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு 63,135 கோடி ரூபாயும்; பெண்களுக்கான திட்டங்களுக்கு 94,663 கோடி ரூபாயும் வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us