/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வானிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல் அதிகரிப்பு
/
வானிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல் அதிகரிப்பு
ADDED : டிச 08, 2025 05:35 AM
பெங்களூரு: பெங்களூரில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், சளி, காய்ச்சலால் அவதிப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. குறிப்பாக சிறார்கள், மூத்த குடிமக்கள் பாதிப்படைந்து உள்0ளனர்.
பெங்களூரில் சமீப நாட்களாக, வானிலை சீராக இல்லை. பகல் நேரத்தில் மேகமூட்டம், மாலை நேரத்துக்கு பின், கடுங்குளிர், அவ்வப்போது பெய்யும் மழை, அபூர்வமாக தலை காட்டும் வெயில் என சூழ்நிலை மாறி, மாறி வருகிறது. இது மக்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. காற்றும் மாசடைந்துள்ளது.
இதன் விளைவாக மூச்சுத்திணறல் பிரச்னை, சளி, குளிர் காய்ச்சல், விஷக்காய்ச்சல் என, பல நோய்களால் அவதிப்படுகின்றனர். மூத்த குடிமக்கள், சிறார்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால், எளிதில் நோய் தொற்றுகிறது. நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவனைகள், கிளினிக்குகளில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளன. மல்லேஸ்வரம் கே.சி.ஜெனரல் மருத்துவமனை, பவுரிங், விக்டோரியா உட்பட, அரசு பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. சிறார்கள், மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை என, மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவ வல்லுநர்கள் கூறியதாவது:
பெங்களூரில் குளிரின் அளவு, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இரவு மட்டுமின்றி, பகல் நேரத்திலும் சில நேரம் குளிர்க்காற்று, சில நேரம் வெயில் தென்படுகிறது. இது ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல. மூச்சுத்திணறல் பாதிப்பால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சிறு குழந்தைகள், மூத்த குடிமக்கள் முடிந்த வரை, வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. உடலை எப்போதும் கதகதப்பாக வைத்திருங்கள். சூடான உணவு, சுடுதண்ணீர் குடிப்பது நல்லது. ஆரோக்கிய பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனை செய்து சிகிச்சை பெறுங்கள். நோயை அலட்சியப்படுத்த கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

