/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மக்காச்சோளம் கொள்முதல் 50 குவிண்டாலாக அதிகரிப்பு
/
மக்காச்சோளம் கொள்முதல் 50 குவிண்டாலாக அதிகரிப்பு
மக்காச்சோளம் கொள்முதல் 50 குவிண்டாலாக அதிகரிப்பு
மக்காச்சோளம் கொள்முதல் 50 குவிண்டாலாக அதிகரிப்பு
ADDED : டிச 08, 2025 05:36 AM

பெங்களூரு: விவசாயிகளின் போராட்டத்துக்கு பணிந்த கர்நாடக அரசு, மக்காச்சோளம் கொள்முதல் அளவை, 20 குவிண்டாலில் இருந்து, 5-0 கிலோவாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் சோளம் பயிரிடுகின்றனர். நெல், கரும்பு போன்று, மக்காச்சோளத்தையும் ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தினர். பல நாட்களாக போராட்டம் நடந்தது.
எதிர்க்கட்சிகளும், விவசாயிகளுக்கு ஆதரவாக நின்றன. மாநிலத்தில் அதிக அளவில் மக்காச்சோளம் விளைந்துள்ளது. இதனால் விலை குறைந்துள்ளது. இது விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும்.
ஆதரவு விலையில் கொள் முதல் செய்யும்படி, மாநில அரசை வலியுறுத்தின. அதை ஏற்றுக்கொண்ட அரசு, கொள் முதல் செய்துள்ளது. குவிண்டாலுக்கு 2,400 ரூபாய் விலை நிர்ணயித்துள்ளது.
ஒவ்வொரு விவசாயியிடமும், 20 குவிண்டால் மக்காச்சோளம் மட்டுமே கொள் முதல் செய்ய முன் வந்தது. இந்த அளவை அதிகரிக்கும்படி விவசாயிகள் நெருக்கடி கொடுத்தனர். இவ்விஷயமாக, பெலகாவி கூட்டத்தொடரின் போது போராட்டம் நடத்தவும் திட்டமிட்டனர்.
இந்நிலையில் மக்காச்சோளம் கொள் முதல் அளவை, 20 குவிண்டாலில் இருந்து 50 குவிண்டாலாக அதிகரித்து, அரசு நேற்று உத்தரவிட்டது. கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கொள் முதல் நடக்கும்.
விவசாயிகள் பதிவு செய்து கொண்டு மக்காச்சோளத்தை விற்கலாம் என அரசு கூறியுள்ளது.
இதன் மூலம் விவசாயிகளை சமாதானம் செய்து, பெலகாவியில் இவர்கள் போராட்டம் நடத்துவதை, அரசு தவிர்த்துள்ளது.

