தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

 உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

 உடல் உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு


ADDED : ஜன 05, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மாநிலத்தில் கடந்தாண்டு, 198 பேரிடம் இருந்து, 564 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. சுகாதார துறை ஏற்படுத்திய விழிப்புணர்வால், உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து, சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:

கர்நாடகாவில் ஆயிரக்கணக்கானோர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். இதற்கு முன், பல்வேறு மூட நம்பிக்கைகள் காரணமாக, மூளைச்சாவு அடைந்த நபர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வரவில்லை.

இதையறிந்த சுகாதார துறை, அரசு சாரா அமைப்புகள், மருத்துவமனைகளுடன் கைகோர்த்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இதன் பலனாக, உடல் உறுப்புகளை தானம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த, 2025ல், சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும், 'உயிர் காக்கும் அமைப்பு' உடல் உறுப்புகள் தானத்தை ஊக்கப்படுத்தியது. மூளைச்சாவு அடைந்தவர்களது குடும்பத்தினரின் மனதை மாற்றி, உடல் உறுப்புகளை தானம் பெற்று, தேவையான நோயாளிகளுக்கு பொருத்த உதவியது. உடல் உறுப்புகளை தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு கடிதமும் வழங்கப்படுகிறது. குடியரசு தினம், சுதந்திர தின நிகழ்ச்சிகளில் அவர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.

உடல் உறுப்புகள் செயல் இழந்து, மாற்று உறுப்புகளுக்காக காத்திருப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. 2023ல் 178 பேரிடம், 469 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. 2024ல், 162 பேரிடம், 457 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டன.

மூளை செயலிழந்த எந்த நபரின் உடல் உறுப்புகளையும் தானம் பெறலாம். இதயம், சிறுநீரகம், கல்லீரல், சிறு குடல் உட்பட, பல்வேறு உறுப்புகளை தானம் செய்யலாம். இதன் மூலம் மற்றவருக்கு உயிர் கொடுக்கலாம்.

மாநில வாரியாக உடல் உறுப்புகள் தானம் செய்வதில், கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகம் முதல் இடத்திலும், தெலுங்கானா இரண்டாவது இடத்திலும் உள்ளன. மஹாராஷ்டிரா, குஜராத் முறையே நான்காவது, ஐந்தாவது இடத்தில் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us