/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெஜஸ்டிக் பகுதியில் திருட்டு அதிகரிப்பு நாகரிக உடை அணிந்து நடமாடும் கும்பல்
/
மெஜஸ்டிக் பகுதியில் திருட்டு அதிகரிப்பு நாகரிக உடை அணிந்து நடமாடும் கும்பல்
மெஜஸ்டிக் பகுதியில் திருட்டு அதிகரிப்பு நாகரிக உடை அணிந்து நடமாடும் கும்பல்
மெஜஸ்டிக் பகுதியில் திருட்டு அதிகரிப்பு நாகரிக உடை அணிந்து நடமாடும் கும்பல்
ADDED : ஏப் 28, 2025 05:06 AM
பெங்களூரு: 'மெஜஸ்டிக் பஸ் நிலைய பகுதியில் நடமாடும் போது, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்பகுதிகளில் திருட்டு அதிகரித்துள்ளது' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து, போலீஸ் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரின் மெஜஸ்டிக் பஸ் நிலையம், ரயில் நிலையம் உட்பட சுற்றுப்புறங்களில் திருட்டு அதிகரிக்கிறது. யாருக்கும் சந்தேகம் ஏற்படாமல், நாகரிகமாக உடையணிந்து நடமாடுகின்றனர்.
மக்களின் பாக்கெட்டில் உள்ள பணம், மொபைல் போன், லேப் டாப் என, கிடைத்ததை சுருட்டி கொண்டு தப்புவர்.
மெஜஸ்டிக் பகுதியில் நடமாடுவோர், குறிப்பாக நள்ளிரவில் நடமாடும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏப்ரல் 12, 16, 18ம் தேதியன்று, டெர்மினல் 1, 2, 3ல் மூவரின் லேப்டாப்கள் திருடப்பட்டன.
ஜெ.பி., நகரில் வசிக்கும் அஜன், 21, பி.டெக்., படிக்கிறார். இவர் ஏப்ரல் 12ம் தேதியன்று பஸ்சில் ஆந்திராவுக்கு புறப்பட்டார். டெர்மினல் 3ல் பஸ் நின்றிருந்த போது, குடிநீர் வாங்குவதற்காக, லேப்டாப்பை இருக்கையின் லக்கேஜ் பிரிவில் வைத்து விட்டு, கீழே இறங்கினார்.
அவருக்கு முந்தைய இருக்கையில் அமர்ந்திருந்த 20 வயதுள்ள இளைஞர் ஒருவர், மாணவரின் 60,000 ரூபாய் மதிப்புள்ள லேப் டாப்பை திருடிக்கொண்டு தப்பியோடினார். இது குறித்து, உப்பார்பேட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
மருத்துவ பிரதிநிதி அனுஷா, 26, ஏப்ரல் 16ம் தேதியன்று, டெர்மினல் 2ல், இருந்து சிக்கமகளூருக்கு புறப்பட்டார். 50,000 ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் இருந்த பையை, லக்கேஜ் பிரிவில் வைத்திருந்தார். இந்த பை திருடப்பட்டது.
இந்த பையில் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உட்பட பல ஆவணங்களும் வைத்திருந்தார். இவரும் உப்பார் பேட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதேபோன்று மருத்துவ பிரதிநிதி மஞ்சுநாத், 36, ஏப்ரல் 18ம் தேதியன்று இரவு 11:30 மணியளவில், டெர்மினல் 1ல் நண்பருடன் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது இவரது 25,000 ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் திருட்டு போனது.
மூன்று வழக்குகள் குறித்தும், உப்பார் பேட் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்துகின்றனர். சுற்றுப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, திருடர்களை தேடி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

