/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'சக்தி' திட்டத்தால் பணிக்கு செல்லும் மகளிர் அதிகரிப்பு
/
'சக்தி' திட்டத்தால் பணிக்கு செல்லும் மகளிர் அதிகரிப்பு
'சக்தி' திட்டத்தால் பணிக்கு செல்லும் மகளிர் அதிகரிப்பு
'சக்தி' திட்டத்தால் பணிக்கு செல்லும் மகளிர் அதிகரிப்பு
ADDED : ஜூலை 27, 2025 05:06 AM

பெங்களூரு: கர்நாடகாவில் 'சக்தி' திட்டத்தை செயல்படுத்திய பின், வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2023 சட்டசபை தேர்தலின்போது, காங்கிரஸ் அறிவித்த ஐந்து வாக்குறுதி திட்டங்களில் 'சக்தி' திட்டமும் ஒன்று. இதன்படி, அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.
இத்திட்டம் குறித்து, 'சஸ்டெய்னபிள் மொபிலிட்டி நெட்வொர்க்' என்ற அமைப்பு சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதேபோன்ற திட்டம் செயல்படுத்தப்படும் டில்லி, கேரளா, மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பெங்களூரு, ஹூப்பள்ளி, தார்வாட் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் முக்கியமான 10 நகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்ப்டடுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் குறித்து, தன் 'எக்ஸ்' பக்கத்தில் முதல்வர் சித்தராமையா வெளியிட்ட பதிவு:
ஆய்வறிக்கையில், 'சக்தி' திட்டம் செயல்படுத்திய பின், பணிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை, பெங்களூரில் 23 சதவீதமும், ஹூப்பள்ளி - தார்வாடில் 21 சதவீதமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் போக்குவரத்து செலவு 30 முதல் 50 சதவீதம் குறைந்துள்ளதாக பெண்களே கூறியுள்ளனர்.
பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த நோக்கம் நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களை தன்மானத்துடன் வாழ, வழி வகுத்துள்ளது.
இவ்வாறு அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.