UPDATED : அக் 18, 2026 12:00 AM
ADDED : அக் 17, 2026 07:32 PM
பெங்களூரு: பெங்களூரு உட்பட, ஒன்பது மாவட்டங்களில், அக்டோபர் 22ம் தேதி வரை, கன மழை பெய்யும் அறிகுறி தென்படுகிறது. இம்மாவட்டங்களுக்கு, மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவில், வட கிழக்கு மேகங்களின் தாக்கம் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதாலும், அக்டோபர் 22ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் அறிகுறி தென்படுகிறது. பெங்களூரு, கடலோர மாவட்டங்கள் உட்பட, பல மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கனமழை பெய்யலாம்.
உத்தர கன்னடா, தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில், அடுத்த சில நாட்கள் வரை, இடி மின்னலுடன் மழை பெய்யும். கடற்கரை பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசும் வாய்ப்புள்ளது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒன்பது மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நகர், பெங்களூரு ரூரல், சாம்ராஜ்நகர், மைசூரு, குடகு, ஷிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன், ராம்நகர் மாவட்டங்களில், அக்டோபர் 22 வரை, இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்.
பெலகாவி, கதக், தார்வாட், ஹாவேரி, பாகல்கோட் மாவட்டங்களில், சாதாரண மழை பெய்ய வாய்ப்புள்ளது. தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களில், இன்று மழை பெய்யும் அறிகுறி தென்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
