/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இந்திரா கேன்டீன் தங்கவயலில் 20ல் திறப்பு
/
இந்திரா கேன்டீன் தங்கவயலில் 20ல் திறப்பு
ADDED : ஜூன் 17, 2025 11:06 PM

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் வரும் 20ம் தேதி இந்திரா கேன்டீன் திறக்கப்படுகிறது.
கோலார் மாவட்டத்தில் பங்கார்பேட்டை, கோலார், மாலுார், முல்பாகலில் மலிவு விலை உணவகமான இந்திரா கேன்டீன் உள்ளது. ஆனால், தங்கவயலின் ராபர்ட்சன்பேட்டை பி.எம்.சாலையில், அரசு மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்ட கேன்டீன் எப்போது திறக்கப்படும் என்று எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது.
ஒரு வழியாக நாளை மறுநாள் இந்திரா கேன்டீன் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கட்டட தொழிலாளர், ஆட்டோ ஓட்டுநர்கள், துப்புரவு பணியாளர்கள், வெளியூர்களில் இருந்து வந்து ராபர்ட்சன்பேட்டையில் படிக்கும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.