தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பொலிவிழக்கும் இந்திரா உணவகங்கள் உணவின் தரம் குறித்து குற்றச்சாட்டு

 பொலிவிழக்கும் இந்திரா உணவகங்கள் உணவின் தரம் குறித்து குற்றச்சாட்டு

 பொலிவிழக்கும் இந்திரா உணவகங்கள் உணவின் தரம் குறித்து குற்றச்சாட்டு


ADDED : நவ 29, 2025 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: புதிய உணவு மெனுக்கள் அறிமுகம் செய்யாதது, உணவின் தரம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பெங்களூரின் இந்திரா உணவகங்களில், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சரிந்துவிட்டது.

கடந்த 2017ல் காங்கிரஸ் அரசில், ஏழைகள், கூலித்தொழிலாளர்களின் வசதிக்காக, 'இந்திரா உணவகம்' திட்டம் செயல்படுத்தப்பட்டது. முதலில் பெங்களூரிலும் பின் மாநிலம் முழுதும் உணவகங்கள் திறக்கப்பட்டன. ஆரம்பத்தில் உணவகங்களை நிர்வகிப்பதில், அதிகாரிகள் காட்டிய ஆர்வம், நாளடைவில் குறைந்தது.

அடுத்து பா.ஜ., அரசு அமைந்தபோது, இந்திரா உணவகங்களுக்கு நிதியுதவி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 2023ல், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், இந்திரா உணவகங்களுக்கு புத்துயிர் கொடுப்பதாக முதல்வர் சித்தராமையா உறுதி அளித்தார்.

உணவகங்களை புதுப்பிக்கவும், புதிய உணவகங்களை திறக்கவும் நடவடிக்கை எடுத்தார். இந்திரா உணவகங்களுக்கு உணவு சப்ளை செய்த ஒப்பந்ததாரர்கள், தரமான உணவு வழங்காததால், இவர்களை மாற்றிவிட்டு, வேறு ஒப்பந்தத்தாரர்களுக்கு டெண்டர் அளிக்கப்பட்டது.

கேழ்வரகு களி, பிசிபேளே பாத், இட்லி, மங்களூரு பன் உட்பட, புதிய உணவுகளை சப்ளை செய்யும்படி, அரசு உத்தரவிட்டது. ஆனால் ஒப்பந்த நிறுவனங்களுக்கு, தேவையான சமையல் அறைகள், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கப்படவில்லை.

இதனால், வாடிக்கையாளர்களுக்கு புதிய உணவு மெனு வழங்கப்படவில்லை. பழைய மெனுப்படியே உணவு வழங்குகிறது, சில இடங்களில் உணவு தரமாக இல்லை என்பதால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையத் துவங்கியது.

பெங்களூரு மாநகராட்சியாக இருந்தபோது, புதிதாக 52 உணவகம் கட்ட, டெண்டர் அழைக்கப்பட்டது. ஆனால், கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் மட்டும், ஒரு இந்திரா உணவகம் கட்டப்பட்டது. இதை தவிர வேறு எங்கும் உணவகங்கள் திறக்கப்படவில்லை.

உணவின் தரத்தை காப்பாற்றவும், உணவு வினியோகிப்பில் முறைகேடு நடப்பதை தடுக்கவும், மார்ஷல்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் உணவின் சுவையில் மாற்றம் ஏற்படாததால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. விரைவில் உணவு மெனுவை மாற்றும்படி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us