/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'இன்போசிஸ்' குடும்பம் ஜாதிவாரி சர்வேக்கு 'நோ'
/
'இன்போசிஸ்' குடும்பம் ஜாதிவாரி சர்வேக்கு 'நோ'
ADDED : அக் 16, 2025 05:14 AM

பெங்களூரு: 'இன்போசிஸ்' நாராயண மூர்த்தியின் குடும்பத்தினர் ஜாதிவாரி சர்வேயில் பங்கேற்க மாட்டோம் என பிற்படுத்தப்பட்டோர் ஆணயத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
கர்நாடகாவில் ஜாதிவாரி சர்வேயை பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நடத்துகிறது. இதில் பங்கேற்க விரும்பாதோருக்கு விலக்கு அளிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி, அவரது மனைவியும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சுதா மூர்த்தி ஜாதிவாரி சர்வேயில் பங்கேற்க விருப்பமில்லை என பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களுக்காக ஜாதிவாரி சர்வேயில் பங்கேற்கவில்லை. நாங்கள் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் கிடையாது. எனவே, இந்த சர்வேயால் எந்த பயனும் இல்லை. எங்கள் குடும்பத்தினர் அனைவரும் சர்வேயில் பங்கேற்கப்போவதில்லை என கூறப்பட்டு உள்ளது.