ADDED : அக் 16, 2025 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிக்கை கேட்டுள்ளோம்! ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிக்கு பொது இடத்தில் தடை விதிப்பது தொடர்பாக பேசிய, அமைச்சர் பிரியங்க் கார்கேக்கு யார் மிரட்டல் விடுத் தனர்; எங்கிருந்து அழைப்பு வந்தது என்று விசாரிப்போம்.
இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். மாநில அரசியலுக்கு வந்தால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை வரவேற்கிறேன். யாத்கிரில் ஏ.எஸ்.ஐ., கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக, முன்னாள் அமைச்சர் ராஜு கவுடா கூறியது பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஹிதேந்திராவுக்கு உத்தரவிட்டுள்ளேன். -பரமே ஸ்வர், மாநில உள்துறை அமைச்சர்