/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இனிமை தமிழ் வகுப்புகள் காக்ஸ்டவுனில் துவக்கம்
/
இனிமை தமிழ் வகுப்புகள் காக்ஸ்டவுனில் துவக்கம்
ADDED : அக் 28, 2025 04:34 AM

பெங்களூரு: பெங்களூரு தமிழ் சங்கத்தின் இனிமை தமிழ் வகுப்புகள், காக்ஸ்டவுனில் துவங்கப்பட்டு உள்ளன.
பெங்களூரில் வாழும் சிறுவர் -- சிறுமியர் தமிழ் எழுத, வாசிக்க கற்றுக் கொடுக்கும் நோக்கில் பெங்., தமிழ்ச் சங்க தலைவர் கோ.தாமோதரன், செயலர் சம்பத் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, 'இனிமைத் தமிழ் வகுப்பு' பெங்களூரு தமிழ்ச் சங்கத்தால் துவங்கப்பட்டது. இதன் பொறுப்பாளராக சங்க துணை தலைவர் அமுத பாண்டியன் உள்ளார்.
அசோக்நகர் வெஸ்லி தமிழ் தேவாலயம், சாம்ராஜ்பேட்டை துாய லுாக்கா தேவாலயம், ஹலசூரு துாய திரித்துவ தேவாலயத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் தமிழ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், நேற்று முன்தினம் காக்ஸ்டவுனில் உள்ள துாய பேதுரு தேவாலயத்தில் புதிதாக வகுப்புகள் துவங்கப்பட்டன.
ஆலய போதகர் ஆர்.டேனியல், செயலர் ராஜசேகர், பொருளாளர் ஞான பிரகாசம் ஆகியோர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க பேராசிரியர் பொன்.கா.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வகுப்பிற்கான ஏற்பாடுகளை கவிஞர்கள் கே.ஜி.ராஜேந்திர பாபு, அரங்க கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர். 65க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இந்த வகுப்பு ஞாயிற்றுக்கிழமை பகல் 11:00 முதல் 12:00 மணி வரை நடக்கும். இதில், சேர விருப்பமுள்ளோர் 94482 01837 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

