/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலீசாரை தாக்கிவிட்டு தப்பிய கொள்ளையனை சுட்டு பிடித்த இன்ஸ்.,
/
போலீசாரை தாக்கிவிட்டு தப்பிய கொள்ளையனை சுட்டு பிடித்த இன்ஸ்.,
போலீசாரை தாக்கிவிட்டு தப்பிய கொள்ளையனை சுட்டு பிடித்த இன்ஸ்.,
போலீசாரை தாக்கிவிட்டு தப்பிய கொள்ளையனை சுட்டு பிடித்த இன்ஸ்.,
ADDED : ஆக 23, 2025 06:30 AM
மாண்டியா: நகைக்கடையில் கொள்ளை அடித்ததை பார்த்ததால், ஹோட்டல் உரிமையாளரை கொலை செய்தவரை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
மாண்டியா நகரின் கிருகாவலு கிராமத்தில் உள்ள நகைக்கடையில் மர்ம கும்பல் இம்மாதம் 17ம் தேதி இரவு, பூட்டை உடைத்து புகுந்தனர்.
லாக்கரில் இருந்த 150 கிராம் எடையுள்ள தங்க நகைகள், இரண்டு கிலோ வெள்ளிப்பொருட்களை பைகளில் நிரப்பிக் கொண்டனர்.
நகைக்கடையில் இருந்து, வெளியே வந்தபோது, கடை பக்கத்தில் ஹோட்டல் நடத்தும் மாதப்பா, 71, என்பவர் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்தபோது, கொள்ளை அடிப்பது தெரிந்தது.
இவரை விட்டு வைத்தால், போலீசாரிடம் காட்டிக் கொடுப்பார் என, நினைத்து முதியவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு கொள்ளையர்கள் தப்பினர்.
அவர்களை கண்டுபிடிக்க, மாவட்ட எஸ்.பி., மல்லிகார்ஜுன பாலதன்டி தனிப்படை அமைத்தார். விசாரணை நடத்திய போலீசார், ஆனந்த், சீனிவாஸ், சரத், கிருஷ்ணாச்சாரி ஆகியோரை கைது செய்தனர்.
கொள்ளையில் தொடர்பு கொண்ட முக்கிய குற்றவாளியான கிரணை, போலீசார் தேடி வந்தனர்.
இவர் மலவள்ளியின், பீமனஹள்ளி அருகில் இருப்பது தெரிந்தது. அவரை கைது செய்ய போலீசார், அங்கு சென்றனர்.
போலீசாரை பார்த்த கிரண், ஏட்டு சீனிவாசை கத்தியால் குத்திவிட்டு, தப்ப முற்பட்டார். அப்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், துப்பாக்கியால் சுட்டதில் காலில் குண்டு பாய்ந்து, கிரண் கீழே விழுந்தார். அவரை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். கத்தி குத்தால் காயமடைந்த ஏட்டு சீனிவாசும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.