/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
/
லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
ADDED : ஏப் 23, 2026 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகல்கோட்: சூ தாட்டத்தில் ஈடுபட்டவரை விடுவிக்க, லஞ்சம் வாங்கிய இன்ஸ்., கைது செய்யப்பட்டு உள்ளார்.
பாகல்கோட் பாதாமி கெரூர் கிராமத்தில், சில நாட்களுக்கு முன்பு சூதாட்டத்தில் ஈடுபட்ட, முத்தப்பா என்பவர் கைது செய்யப்பட்டார். இவரை வழக்கில் இருந்து விடுவிக்க, 2 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று, அவரது குடும்பத்தினரிடம், இன்ஸ்பெக்டர் பீமப்பா டீல் பேசினார்.
இதுபற்றி லோக் ஆயுக்தாவில் புகார் செய்யப்பட்டது. நேற்று காலையில் பீமப்பாவிடம், முத்தப்பா உறவினர்கள் 2 பேர், 1.70 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தனர். அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார், பீமப்பாவை கைது செய்தனர்.

