இன்ஸ்பெக்டரின் ஆபாச தகவல் பெண் ரவுடி 'திடுக்' புகார்
இன்ஸ்பெக்டரின் ஆபாச தகவல் பெண் ரவுடி 'திடுக்' புகார்
ADDED : மார் 26, 2026 12:50 AM

பெங்களூரு: கோனனகுண்டே போலீஸ் இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா ஆபாச தகவல் அனுப்பியதாக, பிரபல பெண் ரவுடி யஷஸ்வினி கவுடா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மூடபிதரே இன்ஸ்பெக்டர் சந்தேஷ், புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இன்ஸ்., சந்தேஷ் தொடர்பான வழக்கை சி.ஐ.டி., விசாரிக்கும் என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறினார்.
இந்த விஷயம் மறைவதற்குள், மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் பெங்களூரில் நடந்து உள்ளது. அதாவது, பெங்களூரு கோனனகுண்டே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் பாப்பண்ணா. இவர், பிரபல பெண் ரவுடியான யஷஸ்வினி கவுடாவுக்கு ஆபாசமாக, 'வாட்ஸாப்'பில் மெசேஜ் அனுப்பி உள்ளார்.
இது குறித்து, பெண் ரவுடி யஷஸ்வினி நேற்று பெங்களூரு கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரில், 'இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா எனது வாட்ஸாப் எண்ணுக்கு சில நாட்களுக்கு முன் மெசேஜ் அனுப்பினார். பின், ஆபாசமாக மெசேஜ்கள் அனுப்பினார். எனது மொபைல் போனுக்கு தினமும் அழைப்பு விடுத்து தொல்லை கொடுத்தார்.
போலீசில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்' என தெரிவித்துள்ளார்.
இந்த புகாருடன், இன்ஸ்பெக்டர் பாப்பண்ணா பேசிய ஆடியோ, 'வாட்ஸாப்'பில் அனுப்பிய மெசேஜ்களின், 'ஸ்கிரீன் ஷாட்'டுகளை ஆதாரமாக சமர்ப்பித்துள்ளார்.
