/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வன்முறை துாண்டும் வீடியோ இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்
/
வன்முறை துாண்டும் வீடியோ இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்
வன்முறை துாண்டும் வீடியோ இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்
வன்முறை துாண்டும் வீடியோ இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்
ADDED : மே 13, 2025 11:59 PM
மங்களூரு : வன்முறையை துாண்டும் விதமாக வீடியோ பதிவிட்டு வந்த இன்ஸ்டாகிராம் கணக்கை சைபர் போலீசார் முடக்கினர்.
தட்சிண கன்னடா, மங்களூரில் பஜ்ரங் தள் பிரமுகர் சுகாஸ் ஷெட்டி, சில தினங்களுக்கு முன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரது கொலைக்கு பழிவாங்கும் விதமாக கொலைகள் நடக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இந்நிலையில், 'டீம் கர்னா சுரத்கல்' என்ற பெயரிடப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில், சுகாஸ் கொலைக்கு பழிவாங்கும் விதமாகவும்; மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகள் வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவிடப்பட்டு வந்தது.
இதை அறிந்த சுரத்கல் போலீசார், அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கு, மங்களூரு நகர் சி.இ.என்., குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, சைபர் போலீசார் அந்த கணக்கை முடக்கம் செய்தனர்.
இது குறித்து, நேற்று மங்களூரு போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் கூறுகையில், ''சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவு செய்த காரணத்திற்காக இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது.
''இந்த கணக்கை 1,650 பேர் பின்தொடர்ந்தனர். இந்த கணக்கின் உரிமையாளர் விரைவில் கைது செய்யப்படுவார்,'' என்றார்.