தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அத்திப்பள்ளி வரை மெட்ரோ ரயில்  அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தல் 

 அத்திப்பள்ளி வரை மெட்ரோ ரயில்  அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தல் 

 அத்திப்பள்ளி வரை மெட்ரோ ரயில்  அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தல் 


ADDED : ஆக 19, 2026 11:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2026 11:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பொம்மசந்திரா முதல், அத்திப்பள்ளி வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பது குறித்து, பெங்களூரு மெட்ரோ நிறுனவம் விரைந்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என, மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.

பெங் களூரு பொம்மசந்திரா முதல், தமிழக எல்லையில் அமைந்துள்ள அத்திப்பள்ளி வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க, பெங்களூரு மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மொத்தம், 10.5 கி.மீ.,க்கு ரயில் சேவையை நீட்டிக்கவும், புதிதாக ஒன்பது ரயில் நிலையங்களை அமைக்கவும் முடிவானது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது, தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு பணிக்கு வருவோர் பயனடைவர். இதனால், இத் திட்டத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இத்திட்டத்தின் சாத்தியக்கூறுகள், நிலம் கையகப்படுத்துதல் குறித்து ஆராய்ந்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டது .

இந்த அறிக்கையை பெங்களூரு மெட்ரோ நிறுவனம் விரைந்து சமர்ப்பிக்க வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. அதே சமயம், தமிழக எல்லை வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிப்பதற்கு, கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us