/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.சி., துணை பிரிவுகளுக்கு உள் இடஒதுக்கீடு மசோதா?
/
எஸ்.சி., துணை பிரிவுகளுக்கு உள் இடஒதுக்கீடு மசோதா?
எஸ்.சி., துணை பிரிவுகளுக்கு உள் இடஒதுக்கீடு மசோதா?
எஸ்.சி., துணை பிரிவுகளுக்கு உள் இடஒதுக்கீடு மசோதா?
ADDED : அக் 30, 2025 04:50 AM

பெங்களூரு: எஸ்.சி., சமூகத்திற்கு உட்பட்ட 101 துணை பிரிவுகளுக்கு, உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த மசோதா கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் எஸ்.சி., சமூகத்திற்கு உட்பட்ட 101 துணை பிரிவுகளுக்கு, உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான கமிட்டி, முதல்வர் சித்தராமையாவிடம் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி அறிக்கை அளித்தது.
இந்த அறிக்கையை அமல்படுத்துவது தொடர்பாக, சித்தராமையா தலைமையில் விதான் சவுதாவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. தலித் சமூக அமைச்சர்கள் மஹாதேவப்பா, பரமேஸ்வர், முனியப்பா, சிவராஜ் தங்கடகி, பிரியங்க் கார்கே, திம்மாபூர், சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், தலைமை செயலர் ஷாலினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
'எந்த அநீதியும் ஏற்படாத வகையில், 101 துணை பிரிவினருக்கும் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். ஜாதி சான்றிதழ் சமர்ப்பிப்பது குறித்து விரிவான வழிகாட்டுதல் வெளியிட வேண்டும்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்' என, முதல்வர் சித்தராமையா அறிவுறுத்தினார்.
உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த அவசர சட்டம் கொண்டு வருவதற்கு பதிலாக, மசோதா கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வரைவு அறிக்கை, இன்று நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
உள் இடஒதுக்கீட்டில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நாடோடி சமூகத்தினர் கூறி வருகின்றனர். இதனால் அவர்களை திருப்திப்படுத்த 2,000 கோடி ரூபாய்க்கு, நாடோடி சமூகத்திற்கு சிறப்பு தொகுப்பு அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

