/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மே 5 - 17 வரை உள் இட ஒதுக்கீடு கணக்கெடுப்பு
/
மே 5 - 17 வரை உள் இட ஒதுக்கீடு கணக்கெடுப்பு
ADDED : ஏப் 30, 2025 10:45 AM
பெங்களூரு: ''மே 5ம் தேதி முதல் 17ம் தேதி வரை மாநிலம் முழுதும், எஸ்.சி., பிரிவில் உள் இடஒதுக்கீடு தொடர்பாக, 58,960 பேர் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவர்,'' என, ஓய்வு பெற்ற நீதிபிதி நாக்மோகன் தாஸ் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எஸ்.சி., சமுதாயத்தில் உள்ள உள் பிரிவுகளுக்கு, உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து, மே 5ம் தேதி முதல் 17ம் தேதி வரை மாநிலம் முழுதும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இந்த கணக்கெடுப்பில், 58,960 பேர் ஈடுபடுகின்றனர். இவர்களை கண்காணிக்க, 6,000 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு இன்று முதல் மே 5ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்படும்.
இந்நாட்களில் பதிவு செய்ய முடியாதவர்கள், மே 19 முதல் 23ம் தேதி வரை பஞ்சாயத்து அளவில் கணக்கெடுப்பு மையங்கள் அமைக்கப்படும்.
இங்கு நேரடியாக சென்று தங்கள் விபரங்களை தெரிவிக்கலாம். அதன்பின், இத்தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.
எஸ்.சி., சமூகத்தை சேர்ந்த அனைவரும், கணக்கெடுப்பில் பங்கேற்று, துல்லியமான தகவல்கள் வழங்க வேண்டும். இது, விரைவில் உள் இட ஒதுக்கீடு வழங்க உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.

