தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மைசூரு அரண்மனையில் சர்வதேச யோகா தினம்

மைசூரு அரண்மனையில் சர்வதேச யோகா தினம்

மைசூரு அரண்மனையில் சர்வதேச யோகா தினம்


ADDED : ஜூன் 11, 2025 08:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2025 08:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு : ''மைசூரு அரண்மனை வளாகத்தில் வரும் 21ல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும்,'' என, மாவட்ட கூடுதல் கலெக்டர் சிவராஜு தெரிவித்தார்.

மைசூரு மாவட்ட அளவிலான அலுவலகத்தில், நேற்று கூடுதல் கலெக்டர் சிவராஜு தலைமையில், சர்வதேச யோகா தினம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. பின், அவர் அளித்த பேட்டி:

வரும் 21ம் தேதி மைசூரு அரண்மனை வளாகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

இம்முறை 15,000 பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் விதிமுறைப்படி, அன்றைய தினம் காலை 6:00 மணிக்கு யோகா நிகழ்ச்சி துவங்கும்.

இதில் பங்கேற்போருக்கு, 'டி ஷர்ட், டிராக் பேன்ட்' வழங்கப்படும். சொந்தமான யோகா மேட்டை கொண்டு வர வேண்டும். ஜூன் 15ம் தேதி இதற்கான ஒத்திகை நடக்கும்.

ஜே.எஸ்.எஸ்., சம்ஸ்தே, சிஸ்மம் பள்ளி, யோகா சங்கம், யோகா பயிற்சி மையம், என்.சி.சி., - என்.எஸ்.எஸ்., பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், பொது மக்கள் பங்கேற்கின்றனர். விருப்பம் உள்ளவர்களும் பங்கேற்கலாம்.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், குடிநீர் வசதிகள் செய்யப்படும். சுத்தமான குடிநீர் வழங்கும் பணியை மாநகராட்சியினர் மேற்கொள்வர். இதில் பங்கேற்போருக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தன்னார்வலர்களை நியமிக்கும் பொறுப்பு, அரண்மனை வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. யோகாவில் பங்கேற்போருக்கு சான்றிதழ் வழங்கப்படும். இது தொடர்பாக அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us