பிரசாரத்திற்கு எத்னால் வர வாய்ப்பு பா.ஜ., வீரண்ணா சரந்திமத் பேட்டி
பிரசாரத்திற்கு எத்னால் வர வாய்ப்பு பா.ஜ., வீரண்ணா சரந்திமத் பேட்டி
ADDED : மார் 18, 2026 05:56 AM

பாகல்கோட்: ''பாகல்கோட்டில் போட்டியிடும் எனக்காக பிரசாரம் செய்ய, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பசனகவுடா பாட்டீல் வர வாய்ப்பு உள்ளது,'' என, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., வீரண்ணா சரந்திமத் கூறினார்.
பாகல்கோட்டில் அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில், பாகல்கோட் தொகுதி வளர்ச்சிக்காக ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. தற்போது இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், மருத்துவ கல்லுாரி திறக்க பூமி பூஜை செய்து உள்ளனர்.
இவர்களின் மாயாஜாலம் இங்கு எடுபடாது. மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., மேட்டி தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அவர் குடும்பத்தில் யார் நின்றாலும் தோற்பது உறுதி. அனுதாப ஓட்டுக்கள் கிடைக்காது.
நான் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, நிறைய நீர்பாசன திட்டங்களை தொகுதிக்கு கொண்டு வந்துள்ளேன். வாக்காளர்கள் விழிப்புணர்வுடன் இருந்து, தொகுதிக்காக வேலை செய்வோருக்கு ஓட்டு போட வேண்டும்.
முஸ்லிம்களை காங்கிரஸ் ஓட்டு வங்கியாக மட்டுமே பார்க்கிறது. இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னாலும், நானும் பல ஆண்டு நண்பர்கள். அவரது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு கூட சென்று வந்தேன். தேர்தலில் போட்டியிடும் எனக்காக பிரசாரம் செய்ய, எத்னால் வர வாய்ப்பு உள்ளது. மத்திய அமைச்சர்கள் குமாரசாமி, பிரஹலாத் ஜோஷி, மத்திய இணை அமைச்சர்கள் ஷோபா, சோமண்ணாவும் பிரசாரத்திற்கு வருவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
