தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ போதையில் இருந்தவர் கார் 'டெஸ்ட் டிரைவிங்' 4 வாகனங்கள் சேதம்

 போதையில் இருந்தவர் கார் 'டெஸ்ட் டிரைவிங்' 4 வாகனங்கள் சேதம்

 போதையில் இருந்தவர் கார் 'டெஸ்ட் டிரைவிங்' 4 வாகனங்கள் சேதம்


ADDED : ஏப் 18, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மஹாதேவபுரா: மது போதையில் இருந்தவரிடம், காரை டெஸ்ட் டிரைவிங்குக்கு கொடுத்து, ஷோரூம் ஊழியர் குளறுபடி செய்துள்ளார். இது, அசம்பாவிதத்துக்கு காரணமானது.

பெங்களூரு, மஹாதேவபுராவின் விக்ஞேஸ்வர நகரில், மஹிந்திரா கார் ஷோரூம் உள்ளது. ஏப்ரல், 12ம் தேதி, இங்கு கார் வாங்குவதற்காக அபிலாஷ் என்பவர் வந்திருந்தார். கார்களை பார்வையிட்டார். காரை 'டெஸ்ட் டிரைவ்' செய்ய வேண்டும் என, கேட்டார்.

அபிலாஷ் குடிபோதையில் இருப்பது தெரிந்தும், அவரிடம் ஷோரூம் ஊழியர், காரை கொடுத்தார். அப்போது, அபிலாஷ், சாலையில் குறுக்கும், நெடுக்குமாக, காரை ஓட்டி சென்று சாலையில் நின்றிருந்த நான்கு வாகனங்கள் மீது மோதியதில், அவைகள் சேதமடைந்தன. கார் மோதியதில், ரமேஷ் என்பவரின் கால் முறிந்தது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்கள், கோபமடைந்து அபிலாஷை காரில் இருந்து வெளியே இழுத்து, கண் மூடித்தனமாக தாக்கியதில், அவரும் காயமடைந்து சிகிச்சை பெறுகிறார்.

இது பற்றி தகவலறிந்து, அங்கு சென்ற மஹாதேவபுரா போலீசார் பார்வையிட்டனர். தாறுமாறாக கார் ஓட்டி, பொது மக்களின் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்திய அபிலாஷ் மீது, வழக்கு பதிவாகியுள்ளது.

குடிபோதையில் இருந்தவரிடம், காரை டெஸ்ட் டிரைவுக்கு கொடுத்த, ஷோரூம் ஊழியரிடமும் விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us