/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இயற்கைக்கு உகந்த நந்தினி பால் பாக்கெட்டுகள் அறிமுகம்
/
இயற்கைக்கு உகந்த நந்தினி பால் பாக்கெட்டுகள் அறிமுகம்
இயற்கைக்கு உகந்த நந்தினி பால் பாக்கெட்டுகள் அறிமுகம்
இயற்கைக்கு உகந்த நந்தினி பால் பாக்கெட்டுகள் அறிமுகம்
ADDED : ஜூலை 19, 2025 11:11 PM
பெங்களூரு: 'பெங்களூரில் இம்மாத இறுதிக்குள், எளிதில் மக்கும் தன்மை கொண்ட நந்தினி பால் பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்படும்' என, கே.எம்.எப்., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, கே.எம்.எப்., அதிகாரிகள் கூறியதாவது:
கே.எம்.எப்., எனும் கர்நாடகா பால் கூட்டமைப்பின் கிளை நிறுவனமான 'பாமுல்' எனும் பெங்களூரு பால் கூட்டமைப்பில் இயற்கைக்கு உகந்த பால் பாக்கெட்டுகள் தயாரிக்க திட்டமிடப்பட்டன.
பாலித்தினுக்கு பதிலாக மக்காச்சோளம், கரும்பு கழிவுகளை கொண்டு பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டன. இந்த பாக்கெட்டுகள் 90 நாட்களில் மக்கும் தன்மை உடையவை. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதது.
கனகபுரா பால் பண்ணையில் தயாரித்து ஹுசனஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சோதனை செய்யப்பட்டது. பாக்கெட்டுகளில் கசிவு ஏதும் ஏற்படவில்லை; பாலின் தரமும் குறையவில்லை. இம்மாத இறுதிக்குள் பெங்களூரில் அறிமுகப்படுத்தப்படும். இதன்பின் மாநிலம் முழுதும் அறிமுகப்படுத்தப்படும். நாட்டிலே முதல் முறையாக கர்நாடகாவில் அமல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர்கள்கூறினர்.