/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுப்பு
/
தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுப்பு
ADDED : அக் 18, 2025 04:57 AM

பெங்களூரு: தீபாவளியை முன்னிட்டு பெங்களூரில் இருந்து, தமிழர்கள் உட்பட பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.
பெங்களூரில் உள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள் உள்ளிட்ட தொழில் துறையில், தமிழகத்தின் ஏராளமானோர் பணி செய்கின்றனர். இதனால் சொந்த ஊரில் இருந்து குடியேறி, பெங்களூரில் வசிக்கின்றனர்.
வரும் 20ம் தேதி தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்றும், நாளையும் வார இறுதி நாட்கள்; நாளை மறுநாள் தீபாவளிக்கு விடுமுறை என்று தொடர்ந்து, மூன்று நாட்கள் விடுமுறை வருவதால், பெங்களூரில் வசிக்கும் தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு நேற்றில் இருந்தே புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்தனர்.
தமிழகத்தின் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, நாகர்கோவில், திருச்சி, கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிப்போர், சாந்திநகர் பஸ் நிலையத்திலும்; திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிப்போர் சாட்டிலைட் பஸ் நிலையத்திலும் குவிந்தனர்.
இதுபோன்று பெங்களூரு உட்பட கர்நாடகாவில் வரும் 22ம் தேதி தீபாவளி கொண்டா டுவதால் இப்போது இருந்தே பலரும் ஊருக்கு செல்ல துவங்கி உள்ளனர். இதனால் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் கட்டுக் கடங்காத கூட்டம் அலை மோதியது. பஸ்கள் ஊர்ந்து சென்றன.
கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டாலும், பல ரோடுகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.