/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தேவகவுடா, குமாரசாமி விரைவில் சுற்றுப்பயணம்
/
தேவகவுடா, குமாரசாமி விரைவில் சுற்றுப்பயணம்
ADDED : அக் 18, 2025 04:58 AM

பெங்களூரு: கட்சியை வலுப்படுத்த முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் குமாரசாமி இருவரும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக ம.ஜ.த., - எம்.எல்.சி., ஷ்ரவணா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நேற்று நடந்த ம.ஜ.த., கமிட்டி கூட்டத்தில் மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி, ம.ஜ.த., - எம்.எல்.சி., ஷ்ரவணா உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்த பின், ஷ்ரவணா கூறியதாவது:
குமாரசாமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதே போல தேவகவுடாவும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நலமாக உள்ளார்.
இந்த கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து அனைத்தும் ஆலோசிக்கப்பட்டது. பெங்களூரில் நடக்கவுள்ள கவுன்சிலர் தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஒரு மாதத்திற்கு பின், கட்சியை வலுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் குமாரசாமி, தேகவுடா சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர்.
இளைஞர் அணியின் நிகில் தலைமையில் முதல் கட்டமாக 52 சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் நடக்க உள்ளது. பிரசாரத்தின்போது, கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பா.ஜ.,வுடன் கூட்டணி தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.