/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
8 முதல் 10 வரை வேர்க்கடலை திருவிழா துாய்மை பிரசார திட்டத்துக்கு அழைப்பு
/
8 முதல் 10 வரை வேர்க்கடலை திருவிழா துாய்மை பிரசார திட்டத்துக்கு அழைப்பு
8 முதல் 10 வரை வேர்க்கடலை திருவிழா துாய்மை பிரசார திட்டத்துக்கு அழைப்பு
8 முதல் 10 வரை வேர்க்கடலை திருவிழா துாய்மை பிரசார திட்டத்துக்கு அழைப்பு
ADDED : நவ 05, 2025 12:32 AM

மல்லேஸ்வரம்: ஸ்ரீகாடு மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் வரும் 8, 9, 10 ஆகிய தேதிகளில் ஒன்பதாவது வருடாந்திர வேர்க்கடலை திருவிழா நடக்கிறது.
இதுதொடர்பாக காடு மல்லேஸ்வரா சங்க தலைவர் சிவராம், துணைத்தலைவர் லீலா சம்பிகே ஆகியோர் அளித்த பேட்டி:
காடு மல்லேஸ்வரா பெண்கள் சங்கம், வரும் 8, 9, 10 தேதிகளில் வேர்க்கடலை விழா நடத்துகிறது. நவ., 8ம் தேதி மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் நந்திக்கு வேர்க்கடலை பூஜை செய்யப்படுகிறது.
மாலை 5:00 மணிக்கு, ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, எம்.எல்.சி., ஹரிபிரசாத் ஆகியோர் திருவிழா வை துவக்கி வைக்கின்றனர்.
நவ., 9ம் தேதி காலை ஸ்ரீமதியின் சங்கீத இசை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு இசைக்கலைஞர் கார்த்திகெரே ராகன்னாவுக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை, நடிகர் விஜய ராகவேந்திரா, நடிகை சுதாராணி ஆகியேர் வழங்குகின்றனர்.
நவ., 10ம் தேதி மாலை 5:00 மணிக்கு ஸ்ரீகாடு மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில், ஸ்ரீபிரம்மரம்பா நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6:30 மணிக்கு கர்நாடக - ஜெர்மனி இசை நிகழ்ச்சி நடக்கிறது.
வேர்க்கடலை திருவிழாவில், கர்நாடக, தமிழகம், தெலங்கானா, ஆந்திரா மாநில விவசாயிகள், வேர்க்கடலை விற்க அனுமதி உள்ளது. இதற்காக எந்த கட்டணமும் அவர்களிடம் வசூலிக்கப்படவில்லை.
இடைத்தரகர்கள் இல்லாமல், விவசாயிகள் நேரடியாக நுகர்வோருக்கு விற்கும் 'கிராமப்புற கண்காட்சி'க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் இல்லாத வேர்க்கடலை திருவிழாவில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காகித பைகள் விநியோகம் செய்யப்படும். பிளாஸ்டிக் பாட்டில்களை அழிப்பதற்காக, இயந்திரம் வைக்கப்படும். இந்த இயந்திரத்தில் இந்த பா ட்டில்களை போட்டால், உங்களுக்கு ஒரு ரூபாய் கிடைக்கும். துாய்மை பிரசார திட்டத் துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

