/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துணை முதல்வர் பதவி அமைச்சர் ஜமீர் ஆசை
/
துணை முதல்வர் பதவி அமைச்சர் ஜமீர் ஆசை
ADDED : நவ 05, 2025 12:31 AM

பெங்களூரு: ''துணை முதல்வர் பதவி கொடுத்தால் அதை நிச்சயம் ஏற்பேன்,'' என, மாநில வீட்டு வசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் தடாலடியாக தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநிலத்தில் முதல்வர் பதவி காலியாக இல்லை. முதல்வர் பதவி குறித்து எந்த 'டீலிங்'கும் நடக்கவில்லை. சித்தராமையாவே 2028 வரை முதல்வராக தொடர்வார்.
கட்சியின் மேலிடம் கூறிய வார்த்தைகளை நாங்கள் மீறமாட்டோம். சிலர் என்னிடம் துணை முதல்வர் பதவி வகிக்குமாறு விருப்பம் தெரிவிக்கின்றனர்; அழுத்தம் கொடுக்கின்றனர் என்று கூட சொல்லலாம். கட்சி மேலிடம் வாய்ப்பு அளித்தால் நிச்சயம் துணை முதல்வராக பதவி ஏற்பேன்.
நான் இரண்டரை ஆண்டுகளாக அமைச்சராக இருக்கிறேன். அமைச்சர் பதவியை துறந்துவிட்டு, கட்சி பணியை செய்யுமாறு கூறினாலும் நிச்சயம் செய்வேன். கட்சி மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டவன் நான்.
கரும்பு விவசாயிகள் போராட்டம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி உள்ளேன். கரும்பின் ஆதரவு விலை நிச்சயம் அதிகரிக்கப்படும். ஆனால், இந்த விலை பாகல்கோட், பெலகாவியில் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
துணை முதல்வர் சிவகுமார், முதல்வர் ஆவதற்கு தயாராகி விட்டார் என்பது ஊடகங்களின் கணிப்பு மட்டுமே; அது உண்மையில்லை. அப்படி எந்த 'டீலிங்'கும் கட்சிக்குள் நடக்கவில்லை. காங்கிரஸ் என்பது மரியாதையான கட்சி. அதில், ஒரு சிப்பாயாக நின்று செயல்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

