/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிதியுதவி தாமதம் மத்திய அரசு மீது நீர்ப்பாசனத்துறை அதிருப்தி
/
நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிதியுதவி தாமதம் மத்திய அரசு மீது நீர்ப்பாசனத்துறை அதிருப்தி
நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிதியுதவி தாமதம் மத்திய அரசு மீது நீர்ப்பாசனத்துறை அதிருப்தி
நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிதியுதவி தாமதம் மத்திய அரசு மீது நீர்ப்பாசனத்துறை அதிருப்தி
ADDED : மே 14, 2025 11:07 PM
மைசூரு: கர்நாடக நீர்ப்பாசன திட்டங்களுக்கு, நிதியுதவி வழங்காததால் மத்திய அரசு மீது, மாநில அரசு அதிருப்தி அடைந்துள்ளது.
கர்நாடக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி ஜெயசந்திரா, மாநில கொள்கை மற்றும் திட்ட ஆணைய துணைத்தலைவர் பி.ஆர்.பாட்டீல் ஆகியோர் தலைமையில், நேற்று முன் தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாநிலத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்கு, 2024 - 25 மற்றும் 2025 - 26ம் ஆண்டுக்கான நிதியை மத்திய அரசு வழங்காதது குறித்தும், மாநில அரசின் நிதியுதவியில் நடக்கும் திட்டங்கள், மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நீர்ப்பாசனத்துறை கூடுதல் தலைமை செயலர் கவுரவ் குப்தா கூறியதாவது:
நீர்ப்பாசன திட்டங்கள், நிலத்தடி நீர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு, மத்திய அரசு நிதியுதவி அறிவித்துள்ளது. ஆனால் இந்த நிதியுதவியை வழங்காததால், முக்கியமான திட்டங்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.
பத்ரா மேலணை திட்டம், தேசிய திட்டம் என, மத்திய அரசு அறிவித்தது. ஆனால் இதற்கு தேவையான 5,500 கோடி ரூபாயை, இதுவரை வழங்கவில்லை.
கிருஷ்ணா மற்றும் துங்கபத்ரா நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்பாக, அண்டை மாநிலம் தெலுங்கானா, தேவையான ஒத்துழைப்பு அளிக்கிறது. ஆனால் ஆந்திரா ஒத்துழைப்பது இல்லை. இதனால் நீர்ப்பாசன திட்டங்கள் தாமத மாகின்றன.
மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர், ஆலோசனை கூட்டம் அழைத்தும், ஆந்திரா சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. தமிழகமும் கூட, கர்நாடக நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவது இல்லை.
வரும் நாட்களில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து, திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி தமிழகம், ஆந்திர அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
மாநிலத்தின் ரயில்வே திட்டங்களுக்கு, நிதி பற்றாக்குறை இல்லை. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் சாலை மேம்பாட்டு துறை, கர்நாடகாவின் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தேவையான நிதி வழங்குகிறது.
இவ்வாறு கூறினார்.