/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
100 நாள் வேலை திட்டத்தில் விவசாய பணிக்கு அனுமதி?
/
100 நாள் வேலை திட்டத்தில் விவசாய பணிக்கு அனுமதி?
ADDED : மே 13, 2025 11:51 PM
பெங்களூரு : விவசாய பணிகளுக்கு கூலியாட்கள் பற்றாக்குறையால், விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதை மனதில் கொண்டு, நரேகா திட்டத்தின் கீழ், விவசாய பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது.
வறட்சி, சில நேரங்களில் வெள்ளப்பெருக்கு, தொழிலாளர்கள் பற்றாக்குறை, கூலி அதிகரிப்பு உட்பட, பல்வேறு காரணங்களால் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். நிலத்தை பதப்படுத்த, நாற்று நட, களை எடுக்க, அறுவடை செய்வது என, அனைத்து பணிகளுக்கும் கூலியாட்கள் தேவை. ஆனால் சமீப ஆண்டுகளாக கூலியாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.
தற்போது நரேகா கூலியாட்களுக்கு, தினமும் 370 ரூபாய் ஊதியம் கிடைக்கிறது. எனவே பலரும் நரேகா திட்டத்தின் பணிகளுக்கு செல்கின்றனர். இதன் விளைவாக விவசாய பணிகளுக்கு ஆள் இல்லாமல், உணவு தானியங்கள் உற்பத்தியில் பின்னடைவு ஏற்படுகிறது. இதை உணர்ந்துள்ள மத்திய அரசு, நரேகா திட்டத்தின் கீழ், விவசாய பணிகளை நடத்த அனுமதியளிக்க ஆலோசிக்கிறது.
இது குறித்து, லோக்சபா கூட்டத்திலும் ஆலோசிக்கப்பட்டது. நடப்பாண்டு இத்திட்டம் செயல்படுத்த வாய்ப்புள்ளது. திட்டம் அமலுக்கு வந்தால், விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.