/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஓட்டுகளை திருடுவது எளிதான விஷயமா? லோக் ஆயுக்தா 'மாஜி' நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கேள்வி
/
ஓட்டுகளை திருடுவது எளிதான விஷயமா? லோக் ஆயுக்தா 'மாஜி' நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கேள்வி
ஓட்டுகளை திருடுவது எளிதான விஷயமா? லோக் ஆயுக்தா 'மாஜி' நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கேள்வி
ஓட்டுகளை திருடுவது எளிதான விஷயமா? லோக் ஆயுக்தா 'மாஜி' நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கேள்வி
ADDED : நவ 15, 2025 11:07 PM

மாண்டியா: ''பீஹாரில் தோல்வி அடைவோம் என்பது, காங்கிரசாருக்கு ஏற்கனவே தெரியும். எனவே ஓட்டுத் திருட்டு குற்றச்சாட்டை துவக்கி உள்ளனர்,'' என, லோக் ஆயுக்தா ஓய்வு பெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தெரிவித்தார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அரசியல் காரணங்களுக்காக, எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் ஓட்டுகளை திருடுவது அவ்வளவு எளிதான விஷயமா? இது பற்றி விசாரணை நடத்த முடியாது என, நீதிமன்றமும் கூறியுள்ளது. ஓட்டுகளை திருட முடியாது.
100ல் 15 மட்டுமே பீஹார் தேர்தலில் தோற்போம் என்பது, காங்கிரசாருக்கு முன்கூட்டியே தெரியும். எனவே ஓட்டுத் திருட்டு என, குற்றஞ்சாட்டுகின்றனர்; தோல்விக்கு காரணம் தேடுகின்றனர்.
இதற்கு முன்பு பா.ஜ., - ம.ஜ.த., காங்கிரசிலும் ஊழல் இருந்தது. ஊழலை ஒழிக்க முடியாது. புராணத்திலும் ஊழல் இருந்தது. இப்போது பெரிய அளவுக்கு வளர்ந்துள்ளது. எந்த நாட்டிலும் பொருளாதாரம் சரியில்லை. நமது நாட்டிலும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்ய, அரசிடம் பணம் இல்லை. அன்றைய பிரதமர் ராஜிவ், பகிரங்கமாகவே கூறினார். ஊழல் இருப்பதால் எந்த மேம்பாட்டுப் பணிகளும் நடக்கவில்லை. 100 ரூபாயில் வெறும் 15 ரூபாய் கூட, பணிக்கு பயன்படுத்துவது இல்லை.
இன்று ஒரு கட்சி 40 சதவீதம் ஊழல் என, குற்றஞ்சாட்டினால், மற்றொரு கட்சியினர் உங்களுடையது 60 சதவீதம் ஊழல் அரசு என, குற்றஞ்சாட்டுகின்றனர். இன்று லஞ்சம் வாங்கினால், தண்டனை கிடைக்க 25 முதல் 30 ஆண்டுகள் ஆகின்றன. இதனால் சட்டத்தை பொருட்படுத்துவது இல்லை.
ஊழலை ஒழிக்க முடியாது; ஆனால் கட்டுப்படுத்தலாம். திருப்தியடையும் குணத்தை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நன்றாக படித்து, உயர் பதவிக்கு செல்ல வேண்டும். ஆ னால் இன்று பணம் கொடுத்து, பதவிக்கு சென்று பணம் சம்பாதிக்கின்றனர். நான் பள்ளியில் படித்தபோது, ஒரு லிட்டர் பெட்ரோல் 12 அணாவாக இருந்தது. இ ப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை, 105 ரூபாயாக உள்ளது.
சிறார்களால் மாற்றம் இதுகுறித்து, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். சிறார்களால் மட்டுமே, மாற்றங்களை கொண்டு வர முடியும். புரட்சியால் மாற்றம் ஏற்படாது. அமைதியான முறையில் மாற்றங்களை கொண்டு வரலாம்.
சாலை பள்ளங்களும் கூட, ஒரு விதத்தில் ஊழல்தான். பணிகளின் தொகையில் 40 சதவீதம் தொகையை, லஞ்சம் கொடுத்தால் மிச்ச தொகையில் தரமான பணிகளை நடத்த முடியுமா. தரமற்ற பணிகளை மேற்கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

