/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புகழ்ந்து பேசினால் தவறா? நொந்து கொண்ட பரமேஸ்வர்
/
புகழ்ந்து பேசினால் தவறா? நொந்து கொண்ட பரமேஸ்வர்
ADDED : ஏப் 21, 2025 05:09 AM

பெங்களூரு: துமகூரில் நேற்று முன்தினம் நடந்த அரசு நிகழ்ச்சியில், முதல்வர் சித்தராமையாவை, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் புகழ்ந்து பேசினார். இதன்மூலம் முதல்வருக்கு 'ஐஸ்' வைப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதுகுறித்து பெங்களூரில் நேற்று பரமேஸ்வர் அளித்த பேட்டி:
மாநில பொருளாதாரத்தை முன்னேற்றம் அடைய வைக்கும் வகையில் சித்தராமையா 16 பக்க பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளார். இதற்காக அவரை பாராட்டினேன். ஒருவரை பாராட்ட கூட உரிமை இல்லையா? முதல்வரை புகழ்ந்து பேசுவது தவறா? இதற்காக ஐஸ் வைக்கிறேன் என்று ஊடகத்தினர் சொல்கிறீர்கள்.
கடந்த 28 ஆண்டுகளாக பெங்களூரு - மைசூரு உள்கட்டமைப்பு வழித்தட பிரச்னை தீர்க்கப்படவில்லை. இந்த பிரச்னை பற்றி அமைச்சரவையில் அமர்ந்து அரை மணி நேரத்திற்குள் விவாதிக்க முடியாது. தற்போது அரசு அமைச்சரவை துணை குழு அமைத்து உள்ளது. என்னை தலைவராக நியமித்து உள்ளனர். எம்.எல்.ஏ., ஜெயசந்திரா அளித்த அறிக்கையை ஆய்வு செய்து, எங்கள் அறிக்கையை சமர்ப்பிப்போம்.
பூணுால் சர்ச்சை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அதிகாரிகள் செய்தது தவறு. அப்படி செய்ய சொன்னது யார் என்று தெரியவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை பற்றி விவாதித்து அமல்படுத்த, ஒரு ஆண்டு ஆகும் என்று அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறி இருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. முன்னாள் நிழல் உலக தாதா முத்தப்பா ராய் மகன் ரிக்கி ராய் கார் மீது துப்பாக்கி சூடு நடத்தியது யார் என்று விசாரணையில் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

