/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பக்ரீத் கூட்டு பிரார்த்தனை பங்கேற்க முதல்வர் தயக்கம்?
/
பக்ரீத் கூட்டு பிரார்த்தனை பங்கேற்க முதல்வர் தயக்கம்?
பக்ரீத் கூட்டு பிரார்த்தனை பங்கேற்க முதல்வர் தயக்கம்?
பக்ரீத் கூட்டு பிரார்த்தனை பங்கேற்க முதல்வர் தயக்கம்?
ADDED : ஜூன் 07, 2025 10:57 PM

பெங்களூரு: சின்னசாமி விளையாட்டு அரங்கில், கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அசம்பாவிதம், முதல்வர் சித்தராமையாவை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால், அவர் நேற்று நடந்த பக்ரீத் பிரார்த்தனையில் பங்கேற்காமல் ஒதுங்கினார்.
ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையின்போது, பெங்களூரு, சாம்ராஜ்பேட்டின் ஈத்கா மைதானத்தில், இஸ்லாமியர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபடுவர். முதல்வர் சித்தராமையா பங்கேற்பது வழக்கம். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், அவர் கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்க தவறியது இல்லை.
கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்று, இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு வாழ்த்து கூறுவார்.
வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகையின் போது, முதல்வர் சித்தராமையாவை, ஈத்கா மைதானத்துக்கு அழைத்துச் சென்று, கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்க செய்வது வழக்கம். அதன்படி நேற்று காலை முதல்வரின் வீட்டுக்கு சென்று, கூட்டு பிரார்த்தனைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தார்.
ஆனால் முதல்வர். 'நான் எங்கும் வர முடியாது' என, கூறிவிட்டு வீட்டிலேயே இருந்ததாக, தகவல் வெளியாகியுள்ளது.
சின்னசாமி விளையாட்டு அரங்கில் நடந்த கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவத்துக்கு பின், முதல்வர் சித்தராமையா மன வருத்தத்தில் காணப்படுகிறார். அமைச்சர்களிடமும் தன் மன வருத்தத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.