தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வயிற்றுப்போக்கால் சிறுவன் உயிரிழப்பு அசுத்தமான குடிநீர் காரணமா?

 வயிற்றுப்போக்கால் சிறுவன் உயிரிழப்பு அசுத்தமான குடிநீர் காரணமா?

 வயிற்றுப்போக்கால் சிறுவன் உயிரிழப்பு அசுத்தமான குடிநீர் காரணமா?


ADDED : நவ 29, 2025 06:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கனகபுரா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த எட்டு வயது சிறுவன் வயிற்றுப் போக்கால் உயிரிழந்ததற்கு, அசுத்தமான குடிநீரே காரணம் என கூறப்படுகிறது.

பெங்களூரின் கனகபுரா பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 8 வயது சிறுவன் வசித்தார். சில நாட்களாக கடுமையான வயிற்றுப்போக்கால் அவதிப்பட்ட அவரை, பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

சிறுவனின் உடல் நிலை பாதிப்புக்கு, குடிநீரே காரணம் என, அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடந்த ஒரு மாதமாக, அங்கு அசுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது. சிறுவன் மட்டுமின்றி, அங்கு வசிக்கும் பலரும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர்.

வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இதே குடியிருப்பில் வசிக்கும் ஒருவர், நாள் முழுவதும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு, நேற்று முன் தினம் காலையில் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குடிநீர் வினியோகிக்கும் தொட்டியை ஆய்வு செய்தபோது, அசுத்தமாக இருப்பது தெரிந்தது. இந்த நீரை பயன்படுத்துவதால், மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.

தகவலறிந்து பெங்களூரு குடிநீர் வாரிய அதிகாரிகள், பெங்களூரு தெற்கு மாநகராட்சி அதிகாரிகள், அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து, மக்களுடன் ஆலோசனை நடத்தினர். பிரச்னைக்கு தீர்வு காண்பதாக கூறினர்.

மாநகராட்சி சுகாதார அதிகாரி பாலசுந்தரம் கூறியதாவது:

சிறுவனின் இறப்புக்கு குடிநீர் காரணம் அல்ல. அவருக்கு வேறு ஏதோ நோய் இருந்துள்ளது. சிறுவனின் இறப்புக்கு என்ன காரணம் என, ஆய்வு செய்ய குழுவை அனுப்பியுள்ளோம். முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி, அடுக்குமாடி குறியிருப்பு மக்களிடம் அறிவுறுத்தினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us