/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த ஏட்டுக்கு முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு?
/
அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த ஏட்டுக்கு முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு?
அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த ஏட்டுக்கு முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு?
அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த ஏட்டுக்கு முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு?
ADDED : ஜூன் 17, 2025 08:04 AM
பெங்களூரு : அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த முன்னாள் போலீஸ் ஏட்டு நிங்கப்பா, இரு அமைச்சர்களின் நெருங்கியவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சித்ரதுர்காவை சேர்ந்தவர் நிங்கப்பா சாவந்த், 46. முன்னாள் போலீஸ் ஏட்டு. அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு, 'உங்களின் ஊழல் எனக்கு தெரியும். உங்கள் வீட்டுக்கு லோக் ஆயுக்தா போலீசார் ரெய்டு வருவதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றால், எனக்கு பணம் கொடுக்க வேண்டும்' என்று மிரட்டி பணம் பெற்று வந்தார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்த லோக் ஆயுக்தா போலீசார், இம்மாதம் 2ம் தேதி அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, ஜூன் 17ம் தேதி வரை போலீஸ் கஸ்டடி வழங்கப்பட்டது.
எனவே, அவரை லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவரிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால், கூடுதலாக 15 நாட்கள் போலீஸ் காவல் கேட்டனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், 14 நாட்களுக்கு அனுமதி அளித்து, ஜூன் 30ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது. போலீஸ் கஸ்டடியில் நிங்கப்பா சாவந்த் கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், அரசு அதிகாரிகளை மிரட்டி, முன்கூட்டியே லோக் ஆயுக்தா ரெய்டு குறித்து தகவல் அளிப்பார். இதனால் அச்சமடையும் அரசு அதிகாரிகள் தரும் பணத்தை, 'பிட் காயினில்' முதலீடு செய்து வந்துள்ளார். அத்துடன், இதில், இரு அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்களுக்கும் பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது' என்றன.
குறிப்பிட்ட இரு அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விரைவில் இவர்களும் போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்படுவர் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், நிங்கப்பாவுக்கு ஜாமின் வழங்கக் கோரி, நீதிமன்றத்தில் அவரது வக்கீல் மனுத் தாக்கல் செய்துள்ளார்.