/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஐ.சி.யூ.,வில் வெளியான வீடியோ; தனியார் மருத்துவமனையின் சதியா?
/
ஐ.சி.யூ.,வில் வெளியான வீடியோ; தனியார் மருத்துவமனையின் சதியா?
ஐ.சி.யூ.,வில் வெளியான வீடியோ; தனியார் மருத்துவமனையின் சதியா?
ஐ.சி.யூ.,வில் வெளியான வீடியோ; தனியார் மருத்துவமனையின் சதியா?
ADDED : மார் 25, 2025 02:14 AM

கலபுரகி : “அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனின்றி நோயாளி தவிக்கும் வீடியோ வெளியானதன் பின்னணியில், தனியார் மருத்துவமனையின் சதி இருக்கலாம்,” என, மாநில மருத்துவ கல்வித் துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கலபுரகியில் உள்ள ஜிம்ஸ் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் மின்தடை ஏற்பட்டது. இதனால், ஐ.சி.யூ.,வில் இருந்த மூவருக்கு ஆக்சிஜன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதை தவிர்ப்பதற்காக மருத்துவர்கள் கை பம்ப் மூலமாக, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கினர். இது வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவியது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பலரும் கருத்துகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து, மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் நேற்று கூறியதாவது:
கலபுரகி ஜிம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடை வெகு நேரம் நீடிக்கவில்லை. மின்தடை ஏற்பட்டதற்கு காரணம் தொழில்நுட்ப கோளாறுகளே. ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து, ஜெஸ்காம் நிர்வாக இயக்குநரிடம் பேசினேன். இதுபோன்ற பிரச்னைகள் திரும்ப நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த வீடியோ வெளியானதற்கு பின், அரசு மருத்துவமனைகளின் வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாத, தனியார் மருத்துவமனைகளின் சதி இருப்பதாக சந்தேகம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.