தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மேகதாது திட்டத்திற்கு தொழில்நுட்ப பிரச்னை?

 மேகதாது திட்டத்திற்கு தொழில்நுட்ப பிரச்னை?

 மேகதாது திட்டத்திற்கு தொழில்நுட்ப பிரச்னை?


ADDED : ஜூலை 01, 2026 08:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 08:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'மேகதாது திட்டத்தில் தொழில்நுட்ப பிரச்னை உள்ளதா' எனபதை சரிபார்க்கும்படி அதிகாரிகளுக்கு, முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக வனவிலங்கு வாரிய நிலைகுழு கூட்டம், பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று நடந்தது. அதிகாரிகள் மத்தியில் முதல்வர் சிவகுமார் பேசியதாவது:

மனிதர் - வனவிலங்கு மோதல் அதிகமாக உள்ள பகுதிகளை விட, பண்டிப்பூர், நாகரஹொளேயில் புலிகள், சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இந்த இரண்டு இடங்களிலும் முழு நேர சவாரி துவங்க அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணியர் பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதபடி தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்டும் விஷயத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்துள்ளது. ஆனாலும், தமிழக அரசு அற்ப காரணங்களை கூறி, திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர முயற்சித்து வருகிறது. மேகதாது திட்டத்தில் சிறிய தொழில்நுட்ப பிரச்னை எதுவும் உள்ளதா என்பதை கண்டறிந்து அதை தீர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us