
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது பாயசம் தான். இந்த வாரம் தக்காளி பழங்களால் செய்யப்பட்ட பாயசத்தை செய்து பார்க்கலாம்.
செய்முறை தக்காளி பழங்களை நன்கு கழுவி, வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
தக்காளியை அதிக நேரம் வேக வைக்கக்கூடாது. கொஞ்சமாக வேக வைத்து, தோலுரித்து எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸி அல்லது கைகளால் தக்காளியை நன்கு பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். விதைகள் எதுவும் தேவையில்லையென்றால் வடிகட்டியில் வடித்துக் கொள்ளலாம்.
இதையடுத்து அரிசி, தேங்காய் பூ, முந்திரி மற்றும் கிராம்பு துாள் போன்றவற்றை சேர்த்து, நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பின், ஒரு பாத்திரத்திற்கு மாற்றிய பின், ஏற்கனவே அரைத்து வைத்துள்ள தக்காளி சாறையும், இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
தற்போது தக்காளி பாயசம் செய்வதற்கான கலவை ரெடி. இதையடுத்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தக்காளி சாறை கொதிக்க விடவும்.
ஐந்து நிமிடங்கள் கொதித்த பின், ஏலக்காய் மற்றும் கிராம்புத்துாள் போன்றவற்றை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
இறுதியாக நெய்யில் முந்திரி, திராட்சை போன்றவற்றை வறுத்து, தக்காளி கலவையுடன் சேர்த்தால் போதும் சுவையான தக்காளி பாயசம் ரெடி.
- நமது நிருபர் -

