சட்டவிரோதமாக பதுங்கியிருந்த இஸ்ரேல் நாட்டு பிரஜை கைது
சட்டவிரோதமாக பதுங்கியிருந்த இஸ்ரேல் நாட்டு பிரஜை கைது
ADDED : செப் 17, 2026 03:13 AM

கார்வார்: விசா காலம் முடிந்தும், சட்ட விரோதமாக கர்நாடகாவில் தங்கியிருந்த, இஸ்ரேல் நாட்டின் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர கன்னடாவின் கோகர்ணாவில் இருந்து முருதேஸ்வரா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், வெளிநாட்டு நபர் ஒருவர் நேற்று காலை நடந்து சென்றார்.
இதுபற்றி அறிந்த ஹொன்னாவர் போலீசில் அந்த நபரை பிடித்தனர். அவரது பையை சோதனை செய்த போது, பாஸ்போர்ட், காலாவதியான விசா இருந்தது.
விசாரணையில் அவர் இஸ்ரேல் நாட்டின் மார்சவி அசாப், 54, என்பது தெரிந்தது. கடந்த ஆண்டு, சுற்றுலா விசாவில் இந்தியா வந்த அவர், உத்தர கன்னடா மாவட்டத்திற்கு சுற்றுலா வந்துள்ளார். விசா காலம் முடிந்த நிலையிலும், சொந்த ஊருக்கு திரும்பி செல்லாமல், சட்டவிரோதமாக இங்கு வசித்ததும் தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், பெங்களூரில் உள்ள வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். தற்போது வெளிநாட்டினர் தடுப்பு காவல் மையத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
