தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விமானப்படையில் வேலை தருவதாக வாலிபரிடம் தங்க செயின் 'அபேஸ்'

 விமானப்படையில் வேலை தருவதாக வாலிபரிடம் தங்க செயின் 'அபேஸ்'

 விமானப்படையில் வேலை தருவதாக வாலிபரிடம் தங்க செயின் 'அபேஸ்'


ADDED : செப் 17, 2026 03:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 03:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கங்கமனகுடி: விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி, வாலிபரிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க செயினை 'அபேஸ்' செய்தவரை போலீஸ் தேடுகிறது.

பெங்களூரு ஷெட்டிஹள்ளி கிராஸ் பகுதியில் வசிப்பவர் சுஜன், 25. இவருக்கும், ராவ் பவார், 50, என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டது. ஜாலஹள்ளி விமானப்படை தளத்தில் அதிகாரியாக பணி செய்வதாக, ராவ் பவார் கூறினார்.

'விமானப்படையில் ஒரு பணியிடம் காலியாக உள்ளது. அதை உங்களுக்கு வாங்கி தருகிறேன்' என, சுஜனிடம் ராவ் பவார் கூறினார்.

அதன்படி, நேற்று முன்தினம் சுஜனும், ராவ் பவாரும், ஜாலஹள்ளி விமானப்படை தளத்திற்கு சென்றனர்.

உள்ளே நுழையும் போது கழுத்தில் தங்க சங்கிலி அணிய கூடாது என ராவ் பவார் கூறியதை நம்பி, தான் கழுத்தில் அணிந்திருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க செயினை சுஜன் கழற்றி, ராவ் பவாரிடம் கொடுத்தார்.

பின், ஆதார் கார்ட்டை நகல் எடுத்து வரும்படி சுஜனிடம், ராவ் பவார் கூறினார். சுஜன் சென்ற நேரம் பார்த்து, ராவ் பவார் அங்கிருந்து தப்பினார். அதன் பின், சுஜனால் ராவ் பவாரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுஜன், கங்கமனகுடி போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, ராவ் பவாரை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us