/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2040ல் நிலவுக்கு மனிதனை அனுப்புவோம் இஸ்ரோ தலைவர் நாராயணன் நம்பிக்கை
/
2040ல் நிலவுக்கு மனிதனை அனுப்புவோம் இஸ்ரோ தலைவர் நாராயணன் நம்பிக்கை
2040ல் நிலவுக்கு மனிதனை அனுப்புவோம் இஸ்ரோ தலைவர் நாராயணன் நம்பிக்கை
2040ல் நிலவுக்கு மனிதனை அனுப்புவோம் இஸ்ரோ தலைவர் நாராயணன் நம்பிக்கை
ADDED : டிச 06, 2025 05:26 AM

பெங்களூரு : “நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை, வரும் 2040ல் இந்தியா செய்து முடிக்கும்,” என, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் தலைவர் நாராயணன் கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நம் நாட்டில் விண்வெளி துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் ராக்கெட்டுகள் ஏவப்படும். 2040ல் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை நம் நாடு செய்து முடிக்கும். 40 மாடி உயர அளவு ராக்கெட், அதில், 80,000 கிலோ எடை உடைய செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்த போது, அதற்கு முதலில் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது, கம்ப்யூட்டர் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அதுபோல, ஏ.ஐ.,க்கும் எதிர்ப்புகள் உள்ளன. ஆனால், ஏ.ஐ., நாட்டின் வளர்ச்சிக்கு தேவை. அதிக ராக்கெட்டுகள் ஏவுவதற்கு அதிக ஏவுதளங்கள் தேவை. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன.
அடுத்த ஆண்டு டிசம்பருக்குள், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பயன்பாட்டுக்கு வரும். ஆப்பரேஷன் சிந்துாரின் வெற்றிக்கு, நம் நாட்டின் செயற்கைக்கோள்களும் முக்கிய பங்காற்றின. நிலவின் தென்துருவத்தில் செயற்கைக்கோளை தரையிறக்கிய முதல் நாடு இந்தியா தான்.
வல்லரசு நாடுகளை விட, 50 ஆண்டுகள் கழித்து விண்வெளி ஆராய்ச்சியை துவக்கினோம்.
ஆனால், இன்று விண்வெளி துறையில் பல வல்லரசு நாடுகளுடன் போட்டியிடுகிறோம்.
அமெரிக்காவில் செயற்கைக்கோள் தயாரிக்க ஆகும் செலவில், பத்தில் ஒரு மடங்கை மட்டுமே செலவிட்டு, செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவி வருகிறோம்.
எல்.எம்.வி., - 3 ராக்கெட் திட்டம் அசுர வெற்றி அடைந்துள்ளது. இந்த ராக்கெட் மூலம், 'ககன்யான் - 3'ஐயும் செலுத்த தயார் செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

