sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'ஒர்க் பிரம் ஹோம ் ' கொண்டு வர ஐ.டி., நிறுவனங்கள் ஆலோசனை

 'ஒர்க் பிரம் ஹோம ் ' கொண்டு வர ஐ.டி., நிறுவனங்கள் ஆலோசனை

 'ஒர்க் பிரம் ஹோம ் ' கொண்டு வர ஐ.டி., நிறுவனங்கள் ஆலோசனை


ADDED : மே 15, 2026 03:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 03:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைப்படி, ஊழியர்களுக்கு, 'ஒர்க் பிரம் ஹோம்' நடைமுறையை செயல்படுத்த, பெங்களூரின் சில ஐ.டி., நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

எரிபொருளை மிச்சப்படுத்த, தங்கம் விலை குறைய பிரதமர் நரேந்திர மோடி சில ஆலோசனைகளை சமீபத்தில் கூறினார். 'தங்கம் வாங்குவதை தள்ளி வைக்க வேண்டும்; எரிபொருள் பயன்பாட்டை குறைக்க வேண்டும்; அரசு பஸ்கள், மெட்ரோ ரயில்களை பயன்படுத்த வேண்டும்' என ஆலோசனை கூறினார்.

பலரும் இந்த ஆலோசனைகளை வரவேற்றுள்ளனர். அலுவலகங்களில் ஊழியர்கள் பலர், தங்களின் சொந்த வாகனங்களை விட்டு விட்டு, மெட்ரோ ரயிலில் பயணிக்க துவங்கியுள்ளனர்.

பெங்களூரில் போக்குவரத்து நெரிசல், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அரசு பஸ்கள், மெட்ரோ ரயில்களை பயன்படுத்தினால், போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்தலாம் என, வல்லுநர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, தங்களின் ஊழியர்களுக்கு, ஒர்க் பிரம் ஹோம் நடைமுறையை கொண்டு வர, பெங்களூரின் சில ஐ.டி., நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.ஆனால் இதற்கு டிராவல்ஸ் அசோசியேஷன், தனியார் வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஐ.டி., ஊழியர்களை நம்பி, ஆயிரக்கணக்கான வாடகை கார் ஓட்டுநர்கள், வாழ்க்கை நடத்துகின்றனர். ஒர்க் பிரம் ஹோம் நடைமுறையை செயல்படுத்தினால், இவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும் என, அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us