/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாலியல் தொல்லை ஐ.டி., ஊழியர் கைது
/
பாலியல் தொல்லை ஐ.டி., ஊழியர் கைது
ADDED : ஜூன் 25, 2025 01:22 AM
பெங்களூரு : 'பப்'பில் நடந்த பார்ட்டியில் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற, ஐ.டி., நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஐ.டி., நிறுவன ஊழியர் அனுராக், 27. இவருக்கும், நிறுவனத்தில் பணி செய்யும் 25 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகினர். நேற்று முன்தினம் இரவு கப்பன் பார்க் பகுதியில் உள்ள, 'பப்'பிற்கு இருவரும் பார்ட்டிக்கு சென்றனர். அங்கு மது அருந்திய அனுராக் குடிபோதையில், தோழியின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார்.
அதிர்ச்சி அடைந்த தோழி, அனுராக்கை பிடித்து தள்ளிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
சம்பவம் குறித்து இளம்பெண் அளித்த புகாரில், கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுராக்கை கைது செய்தனர். குடிபோதையில் தோழியிடம் தவறாக நடக்க முயன்றதை அவர் ஒப்புக் கொண்டார். விசாரணை நடக்கிறது.