/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
வீட்டில் குங்குமப்பூ செடி வளர்க்கும் ஐ.டி., ஊழியர்
/
வீட்டில் குங்குமப்பூ செடி வளர்க்கும் ஐ.டி., ஊழியர்
வீட்டில் குங்குமப்பூ செடி வளர்க்கும் ஐ.டி., ஊழியர்
வீட்டில் குங்குமப்பூ செடி வளர்க்கும் ஐ.டி., ஊழியர்
ADDED : நவ 08, 2025 11:02 PM

பெங்களூரு ரூரல், தொட்டபல்லாபூர் டவுனில் வசிப்பவர் பவன் தனஞ்ஜெய், 24; ஐ.டி., ஊழியர். இவர் தன் வீட்டில் பிரத்யேக அறை உருவாக்கி, அங்கு குங்குமப்பூ செடிகளை வளர்க்கிறார்.
இதுகுறித்து பவன் தனஞ்ஜெய் கூறியதாவது:
பெரும்பாலும் குங்குமப்பூ இனிப்பு வகைகள் தயாரிக்க பயன்படுகிறது. பாலுாட்டும் தாய்மார்களும் குங்குமப்பூவை, பாலில் கலந்து குடிக்கின்றனர். தொட்டபல்லாபூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் தான் பிரதான தொழிலாக உள்ளது. பல வகை காய்கறிகள் இங்கு விளைவிக்கப்படுகின்றன.
நான் சற்று மாறுதலாக யோசித்து, குங்குமப்பூ செடி வளர்க்கலாம் என்று நினைத்தேன். காஷ்மீரில் குங்குமப்பூவுக்கு அதிகம் மவுசு உள்ளது. இதனால் அங்கு சென்று குங்குமப்பூ செடிகளை வாங்கி வந்தேன். அங்கு உள்ளவர்களிடம் கேட்டபோது, 'குங்குமப்பூ செடிகளை மிகவும் குளிரான இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்' என்று கூறினர்.
இதனால் என் வீட்டிலேயே பிரத்யேக அறை உருவாக்கி, குங்குமப்பூ செடிகளை வளர்க்கிறேன். ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே, குங்குமப்பூவை பறித்து அதில் உள்ள இதழ்களை விற்பனை செய்கிறேன். அக்டோபர் கடைசி வாரம் முதல் நவம்பர் முதல் வாரம் வரை அதிக பூக்கள் கிடைக்கின்றன.
காஷ்மீர் நிலத்தில் வளர்க்கப்படும் குங்குமப்பூவுக்கு ரசாயன உரம் பயன்படுத்தப்படுவதை பார்த்தேன். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. இயற்கை உரங்கள் மூலம் வளர்க்கிறேன். குளுமையான சூழ்நிலை இருந்தாலே போதும். பூ பூக்கும்போது வெப்பநிலை 6 டிகிரி செல்ஷியஸ் முதல் 9 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும்.
வாரத்திற்கு ஒரு முறை செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். காஷ்மீரில் ஒரு கிராம் 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கர்நாடகாவிலும் நல்ல டிமாண்ட் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

