/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'உரிமம் பெறாத வியாபாரிகளிடம் பட்டாசு வாங்குவது சட்டவிரோதம்'
/
'உரிமம் பெறாத வியாபாரிகளிடம் பட்டாசு வாங்குவது சட்டவிரோதம்'
'உரிமம் பெறாத வியாபாரிகளிடம் பட்டாசு வாங்குவது சட்டவிரோதம்'
'உரிமம் பெறாத வியாபாரிகளிடம் பட்டாசு வாங்குவது சட்டவிரோதம்'
ADDED : அக் 13, 2025 03:38 AM

பெங்களூரு : ''உரிமம் பெறாத வியாபாரிகளிடமிருந்து பட்டாசுகளை வாங்குவது சட்டவிரோதம்,'' என பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. மக்கள் கவனமாக பண்டிகையை கொண்டாட வேண்டும். உரிமம் பெறாத வியாபாரிகளிடமிருந்து பட்டாசுகளை வாங்குவது சட்டவிரோதமானது. இதுபோன்ற பட்டாசுகளால் வெடி விபத்து ஏற்படுத்தும் அச்சம் உள்ளது. பெங்களூரில் 87 இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த இடங்களில் 411 கடைகள் வரை வைக்கலாம். இங்கு அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. இங்கு சென்று மக்கள் பட்டாசுகளை வாங்கி கொள்ளலாம்.
பட்டாசு கடைகள் அமைப்பதற்கு பலரும் உரிமம் கோரி வருகின்றனர். இவர்களில் குலுக்கல் முறைப்படி சிலர் தேர்வு செய்யப்படுவர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 5,000 ரூபாய் கட்டணமாகவும், கடைக்கு 25,000 ரூபாய் வாடகை பணமும் செலுத்த வேண்டும். பட்டாசு கடைகள் காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.