தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விவாதம் நடப்பது இயல்பானதே சபாநாயகர் காதர் தத்துவம்

 விவாதம் நடப்பது இயல்பானதே சபாநாயகர் காதர் தத்துவம்

 விவாதம் நடப்பது இயல்பானதே சபாநாயகர் காதர் தத்துவம்


ADDED : பிப் 08, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தட்சிண கன்னடா: ''சட்டசபை ஒரு குடும்பம் போன்றது. சகோதரர்களுக்கு இடையே விவாதம் நடப்பது இயல்பு தான்,'' என, சட்டசபை சபாநாயகர் காதர் தெரிவித்தார்.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

சட்டசபை ஒரு குடும்பம் போன்றது. சகோதரர்களுக்கு இடையே விவாதம் நடப்பது இயல்பு தான். இது, முதன் முறையாக நடக்கவில்லை. இதுபோன்ற விவாதங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன. விவாதத்துக்கு பின், இரு எம்.எல்.ஏ.,க்களும் நகைச்சுவையாக பேசிக் கொண்டனர். ஆனால், மதிய உணவுக்கு பின் திரும்பி வந்து, மீண்டும் அதே பிரச்னையை எழுப்பியது சரியல்ல.

மாநிலத்தின், 224 எம்.எல்.ஏ.,க்களில் சிலர், இப்படித்தான் நடந்து கொள்கின்றனர். சபையை நடத்துவது சபாநாயகரின் பொறுப்பு மட்டுமல்ல, அனைத்து உறுப்பினர்களுக்கும் பொறுப்பு உள்ளது.

எம்.எல்.ஏ.,க்கள் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தொ குதியிலும், சமூகத்திலும் மக்களை திருத்தும் நிலையில் இருப்பவர்கள், சட்டம் அறிந்தவர்கள் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது. நாம் என்ன செய்கிறோம் என்பதை மக்கள் பார்க்கின்றனர் என்பதை அறிய வேண்டும்.

கடந்த காலங்களில் கடலோர பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் மீது, சபையில் மரியாதை இருந்தது. தற்போது எம்.எல்.ஏ.,க்கள் ஒருவரை ஒருவர், குரங்குகள், விலங்குகள் என்று அழைக்கும் போது, வருத்தம் அளிக்கிறது. சட்டசபையில் உறுப்பினர்கள் இடையேயான மோதல் உச்சத்துக்கு செல்லாமல் இருப்பதே சபையின் உண்மையான கலாசாரம். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் உறுப்பினர்கள் கவனமாக இருக்க வேண்டும். உறுப்பினர்கள் தங்களின் கவுரவத்தை காப்பது அவர்க ளது கையில் தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us