பெட்ரோல் விநியோக இயந்திரம் மீது மோதிய 'ஜாக்குவார ் ' கார் எரிந்தது
பெட்ரோல் விநியோக இயந்திரம் மீது மோதிய 'ஜாக்குவார ் ' கார் எரிந்தது
UPDATED : அக் 09, 2026 04:05 AM
ADDED : அக் 08, 2026 09:54 PM

அத்திப்பள்ளி: பெட்ரோல் வினியோக இயந்திரம் மீது மோதிய, 'ஜாக்குவார்' கார் தீப்பிடித்து எரிந்தது. வாலிபர், இளம்பெண் உயிர் தப்பினர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், அத்திப்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள, ஹெச்.பி., பெட்ரோல் பங்கிற்கு, நேற்று அதிகாலை 12:15 மணிக்கு, ஜாக்குவார் கார் வந்தது. அந்த காருக்கு முன் இரண்டு கார்களுக்கு, பெட்ரோல் பங்க் ஊழியர் டீசல் போட்டார்.
அந்த கார்கள் சென்றதும், ஜாக்குவார் காரில் டீசல் போட, ஊழியர் அழைத்தார். கார் முன்னோக்கி வந்த போது, ஓட்டி வந்தவரின் கட்டுப்பாட்டை இழந்து, பெட்ரோல் விநியோக இ யந்திரம் மீது மோதியது. பம்ப் அருகில் நின்ற குட்டுகுமார் என்ற ஊழியர் படுகாயம் அடைந்தார்.
பெட்ரோல் பம்ப் மீது மோதிய வேக த்தில், காரின் முன்பகுதியில் புகை கிளம்பியது. காருக்குள் இருந்த வாலிபர், இளம்பெண் உடனே கீழே இறங்கினர். சிறிது நேரத் தில் காரில் தீப்பிடித்து ம ளமளவென எரிந்தது.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
ஆனாலும் கார், பெட்ரோல் நிரப்பும் இயந்திரம், பெட்ரோல் பங்க் மேற்கூரை தீயில் எரிந்து சேதமானது. காரை ஓட்டி வந்த சஞ்சய் என்பவரை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
காரை ரிவர்ஸ் எடுக்கும்போது, பிரேக்கிற்கு பதிலாக தவறாக ஆக்சிலேட்டரை மிதித்தால் கார் கட்டுப்பாட்டை இழந்ததாக சஞ்சய் கூறினார். ஆனாலும், அவர் மது அருந்தி இருந்தாரா என்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. விசாரணை நடக்கிறது.
