தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மின் ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு போராட்டம்

மின் ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு போராட்டம்

மின் ஒப்பந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு போராட்டம்


UPDATED : அக் 09, 2026 12:00 AM

ADDED : அக் 08, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 12:00 AM ADDED : அக் 08, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடக மின் பரிமாற்ற கழகம், பெஸ்காம் ஆகியவற்றில் ஒப்பந்த முறையில் வீடுகளுக்கு சென்று மின்சாரம் கணக்கிடும் மீட்டர் ரீடிங் ஊழியராக பணியாற்றுவோர், பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று போராட்டம் நடத்தினர்.

அவர்கள் கூறியதாவது:

‘ஐடியா இன்பினிட்டி’ என்ற தனியார் ஏஜன்சி மூலம் மின்சார துறையில் ஆயிரக்கணக்கானோர் ஒப்பந்த ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று, மின்சார பெட்டியில் ‘ரீடிங்’ எடுப்பதே எங்களது பணி.

ஒரு மாதத்தில் எத்தனை வீடுகளுக்கு சென்று ரீடிங் எடுக்கிறோமோ, அதை வைத்தே சம்பளம் வழங்கப்படுகிறது.

இம்முறை மாற்றப்பட வேண்டும். நிலையான சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

ஏனெனில், தற்போது வெறும் 1௨ ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக கிடைக்கிறது. இதை வைத்து குடும்பத்தை நடத்த முடிவதில்லை. எங்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

எங்களை ஒரு பொருட்டாகவே யாரும் மதிப்பதில்லை. கொத்தடிமை போல நடத்துகின்றனர்.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எங்களது கோரிக்கைகளுக்கு மாநில அரசு செவி சாய் க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us