தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/டீசல் இல்லாமல் பஸ்கள் டிப்போக்களில் நிறுத்தம்

டீசல் இல்லாமல் பஸ்கள் டிப்போக்களில் நிறுத்தம்

டீசல் இல்லாமல் பஸ்கள் டிப்போக்களில் நிறுத்தம்


UPDATED : அக் 09, 2026 12:00 AM

ADDED : அக் 08, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 12:00 AM ADDED : அக் 08, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொப்பால்: டீசல் பற்றாக்குறையால், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களை, டிப்போவிலேயே நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டீசல் வாங்கவும் அரசிடம் பணம் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடக மாநில அரசு, ‘சக்தி’ திட்டத்தை செயல்படுத்திய பின், போக்குவரத்து கழகங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. கொப்பால் மாவட்டத்தின் குஷ்டகியில் டீசல் பற்றாக்குறையால், பல இடங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

டீசல் வாங்குவதற்கு போக்குவரத்து கழகத்திடம் பணம் இல்லை. பெட்ரோலிய நிறுவனங்களுக்கு, டீசல் பாக்கி வைத்துள்ளதால் டீசல் சப்ளை செய்யவில்லை. இதன் விளைவாக டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பஸ்களை இயக்க முடியாமல், பஸ்கள் டிப்போவில் நிறுத்தப்பட்டுள்ளன. குஷ்டகியின் பல்வேறு பகுதிகளில் பஸ்கள் இல்லாமல் பொதுமக்கள், மாணவ – மாணவியர் பாதிப்படைந்துள்ளனர்.

நே ற்று காலையில் பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்லும் பயணியர் மணிக்கணக்கில் பஸ்சுக்காக காத்திருந்தனர். பஸ் போக்குவரத்து இல்லாமல் பயணியர் பரிதவிப்பதை அறிந்த, குஷ்டகி பா.ஜ., – எம்.எல்.ஏ., தொட்டனகவுடா பாட்டீல், பஸ் நிலையத்துக்கு வந்து போராட்டம் நடத்தினார்.

அரசின் அலட்சியத்தை கண்டித்து, பஸ் நிலையம் முன்பாக காலி குடம் வைத்து கொண்டு அமர்ந்த தொட்டனகவுடா, பொதுமக்கள் மற்றும் பயணியரிடம் நன்கொடை வசூலிப்பதன் மூலம், தர்ணா நடத்தினார். அதன் பின் தன் சொந்த செலவில் ஐந்து வேன்களை வரவழைத்து மாணவர்கள், பயணியரை அனுப்பி வைத்தார்.

தொட்டனகவுடா அளித்த பேட்டி:

சக்தி திட்டத்தால், போக்குவரத்து கழகங்கள் பொருளாதார நெருக்கடியால் அவதிப்படுகின்றன. டீசல் வாங்கவும் பணம் இல்லை. அரசு கருவூலம் காலியாக உள்ளது. குஷ்டகி மட்டுமின்றி, பல இடங்களில் இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் பொறுப்பின்மையால், பஸ் போக்குவரத்து இல்லாமல், பயணியர், மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us