/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சொத்து குவித்த அதிகாரிக்கு சிறை; ரூ.70 லட்சம் அபராதம்
/
சொத்து குவித்த அதிகாரிக்கு சிறை; ரூ.70 லட்சம் அபராதம்
சொத்து குவித்த அதிகாரிக்கு சிறை; ரூ.70 லட்சம் அபராதம்
சொத்து குவித்த அதிகாரிக்கு சிறை; ரூ.70 லட்சம் அபராதம்
ADDED : நவ 05, 2025 07:53 AM
பெங்களூரு: சட்டவிரோதமாக சொத்து குவித்த பி.எம்.டி.சி., அதிகாரிக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 70 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, லோக் ஆயுக்தா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பி.எம்.டி.சி.,யில் மண்டல போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றியவர் ராமகிருஷ்ண ரெட்டி.
இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக, லோக் ஆயுக்தாவுக்கு புகார் வந்தது. இதையடுத்து, 2014ல் இவரது வீடு, அலுவலகத்தில், லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்; முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், அவர் வருமானத்துக்கு அதிகமாக 61.45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் வைத்திருப்பதை, அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
ராமகிருஷ்ண ரெட்டி மீது, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவானது.
விசாரணையை முடித்து, லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற விசாரணையில், ராமகிருஷ்ண ரெட்டி சட்டவிரோதமாக சொத்துகள் குவித்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
எனவே அவருக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
அபராதம் செலுத்த தவறினால், ஆறு மாதங்கள் கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்கும்படி உத்தரவிட்டது.

