தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஜெயின் கோவிலில் 3வது முறை திருட்டு

ஜெயின் கோவிலில் 3வது முறை திருட்டு

ஜெயின் கோவிலில் 3வது முறை திருட்டு


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 07:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹூப்பள்ளி: தாதாவாடியின் ஆதிநாத ஜெயின் மந்திரில், முகமுடி கொள்ளையர்கள் புகுந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.

ஹூப்பள்ளி நகரின் தாதாவாடி கிராமத்தில் ஆதிநாத ஜெயின் மந்திர் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, முகமூடி அணிந்த மர்ம கும்பல், இரும்பு ராடால் கோவில் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்தது. கடவுள் சிலைக்கு அணிவித்திருந்த தங்க நகைகள், கிரீடம், வெள்ளி பொருட்கள், ரொக்கம் என, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, திருடிக்கொண்டு தப்பியோடியது.

கோவிலில் திருட்டு நடந்திருப்பதை, நேற்று காலையில் பார்த்த அப்பகுதியினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த பென்டிகேரி போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இந்த ஜெயின் கோவிலில், திருட்டு நடப்பது இது மூன்றாவது முறையாகும். அவ்வப்போது திருட்டு நடப்பதால், பக்தர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கொள்ளையர்களை விரைவில் கண்டுபிடித்து, தண்டிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us